காசநோய் டிஜிட்டல் X-Ray. புதிய தலைமுறை
ஹெல்த்

காசநோயை எளிதில் கண்டறியும் AI தொழில்நுட்பத்தில் டிஜிட்டல் X-Ray... திருச்சியில் அசத்தல் ஏற்பாடு

காசநோயை விரைவில் கண்டறிவதற்காக பிரத்யேக ஏ.ஐ. தொழில்நுட்ப வசதியுடன் கூடிய நடமாடும் வாகனங்கள் திருச்சியின் பல்வேறு பகுதிகளிலும் வலம் வருகின்றன.

PT WEB

காசநோயை விரைவில் கண்டறிவதற்காக பிரத்யேக ஏ.ஐ. தொழில்நுட்ப வசதியுடன் கூடிய நடமாடும் வாகனங்கள் திருச்சியின் பல்வேறு பகுதிகளிலும் வலம் வருகின்றன.

டிஜிட்டல் X-Ray.

2025-ம் ஆண்டிற்குள் காசநோய் இல்லா தமிழகம் என்ற இலக்கை அடைய மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, காசநோயால் பாதிக்கப்பட்டவர்களின் வசிப்பிடத்திற்கே சென்று அங்குள்ளவர்களுக்கு பரிசோதனை செய்ய நடமாடும் மருத்துவ
வாகனங்களை மாவட்ட நிர்வாகங்களுக்கு தமிழக அரசு வழங்கி வருகிறது.

அந்தவகையில், திருச்சியில் மருத்துவ வாகனங்களில், பிரத்யேக ஏ.ஐ. தொழில்நுட்ப வசதியுடன் டிஜிட்டல் எக்ஸ் - ரே எடுக்கப்படுகிறது. இதன்மூலம் காசநோயால் பாதிக்கப்பட்டவர்களை விரைவில் கண்டறிய முடியும் என்கின்றனர் மருத்துவர்கள்.

திருச்சியில் நடப்பாண்டு செப்டம்பர் வரை 9 ஆயிரத்து 360 பேருக்கு, டிஜிட்டல் எக்ஸ் - ரே எடுக்கப்பட்டு அவர்களில்
71 நபர்களுக்கு காசநோய் இருப்பது கண்டறியப்பட்டது. நடமாடும் வாகன திட்டத்தை வரவேற்றுள்ள பொதுமக்கள்,
நோய் தொற்று பரவும் மழை காலங்களில் இது பயனுள்ளதாக
இருக்கும் என்கின்றனர்.

மற்றவர்களிடம் இருந்து எளிதில் பரவும் காச நோயை ஆரம்பகாலத்தில் கண்டறிந்து சிகிச்சை அளிப்பதன் மூலம், அதனை விரைவாக குணப்படுத்த முடியும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கு கைகொடுக்கும் வகையில் டிஜிட்டல் எக்ஸ் - ரே தொழில்நுட்பத்துடன் நடமாடும் வாகனங்கள் செயல்பட்டு வருகின்றன.