இருமல் மருந்து புதிய தலைமுறை
ஹெல்த்

'இருமல் மருந்துகள் நிர்ணயிக்கப்பட்ட தரத்தில் இல்லை..' ஆய்வில் கண்டுபிடிப்பு!

இருமல் மருந்துகள் பாதுகாப்பாக உள்ளதா என்பதை அவற்றின் உற்பத்தியாளர்கள் உறுதிப்படுத்த வேண்டும் என மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.

PT WEB

“உரிய தரம் மற்றும் பயனளிக்கும் தன்மையுடன் இருக்கும் மூலப்பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்” என இருமல் மருந்து உற்பத்தியாளர்களை மத்திய ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

உற்பத்தி நிறுவனங்களில் இருந்து மருந்துகளை வாங்கி மத்திய ஆணையம் பரிசோதித்ததில் அவற்றில் சில, நிர்ணயிக்கப்பட்ட தரத்திற்கு கீழ் இருப்பது தெரியவந்தது. செப்டம்பரில் நடத்தப்பட்ட சோதனையில் 5% மருந்துகளும் அக்டோபரில் நடத்தப்பட்ட சோதனையில் 6% மருந்துகளும் தரக்குறைவாக இருந்தது தெரியவந்துள்ளதாக மத்திய ஆணையம் கூறியுள்ளது.

இருமல் மருந்துகள் மட்டுமல்லாமல் ஆன்டிபயாடிக் வகை மருந்துகள், தொண்டை தொற்றுக்கான மருந்துகள், வயிற்றுப்புழுக்களை அழிப்பதற்கான மருந்துகளும் நிர்ணயிக்கப்பட்ட தரத்தில் இல்லை என தெரியவந்ததாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த சூழலில் மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு ஆணையத்தின் அறிவுறுத்தல் வெளியாகியுள்ளது.