எம்பாக்ஸ்  முகநூல்
ஹெல்த்

எம்-பாக்ஸ் தடுப்பு பணிகள்: மாநிலங்களுக்கு கடிதம் எழுதிய மத்திய அரசு!

எம்பாக்ஸ் தடுப்பு பணிகளை வலுப்படுத்த கோரி மாநிலங்களுக்கு மத்திய சுகாதார செயலாளர் கடிதம் எழுதியுள்ளார்.

PT WEB

எம்பாக்ஸ் தடுப்பு பணிகளை வலுப்படுத்த கோரி மாநிலங்களுக்கு மத்திய சுகாதார செயலாளர் கடிதம் எழுதியுள்ளார். எம்பாக்ஸ் நோயின் உருமாறிய வகையான கிளேட் 1 வகையில் சிக்கல்கள் அதிகம் என்பதால் அனைத்து மாநிலங்களும் தடுப்பு நடவடிக்கைகளை சரியாக எடுக்க வேண்டும் என கடிதத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன் பீதி ஏற்படாமல் தடுக்க வேண்டும் எனவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சந்தேகத்திற்கிடமான மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளுக்காக மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தும் வசதிகளை நியமித்தல், சுகாதாரப் பணியாளர்களுக்கு பயிற்சி அளித்தல் மற்றும் மருத்துவ உபகரணங்களை உறுதி செய்தல் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவும் கடிதத்தில் மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.