புதிய ஆய்வு முகநூல்
ஹெல்த்

நிறுத்திய 7.3 மாதங்களில்தான் மதுவால் ஏற்பட்ட பாதிப்பை மூளை சரி செய்கிறது - ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

7.3 மாதங்கள் மது அருந்தாமல் இருந்தால், அதன் விளைவு மது அருந்தியதால் பாதித்த மூளையின் பகுதியை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு செல்வதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

ஜெனிட்டா ரோஸ்லின்

7.3 மாதங்கள் மது அருந்தாமல் இருந்தால், அதன் விளைவு மது அருந்தியதால் பாதித்த மூளையின் பகுதியை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு செல்வதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

நண்பர்களுடன் விளையாட்டாகவும், திரைப்படத்தை பார்த்தும், தெரிந்த நபரின் தூண்டுதலாலும், தாக்கத்தாலும் பரிட்சயம் ஆகும் மது பழக்கமானது சிறிது காலத்தில் அதிலிருந்து மீளமுடியாத அளவிற்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதாக அமைகிறது. இதனால் குடும்ப வாழ்வும் தனி மனித உடல்நலமும் சமூதாய வாழ்வும் பெரும் மாற்றத்தினையும் தாக்கத்தினையும் ஏற்படுத்துகிறது.

அதேசமயம் அப்பழக்கத்திலிருந்து மீண்டு வருபவர்களும் இருக்கிறார்கள். இப்படி குடிப்பழக்கத்தினை நிறுத்தியவுடன் அதனால் பாதிக்கப்பட்டவர்கள் எவ்வாறு அதிலிருந்து மீண்டு வருகின்றனர் என்பதை விளக்கும் ஆய்வாக தான் இச்சோதனையானது அமைகிறது.

AUD:

குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கு ஆல்கஹால் யூஸ் டிஸாடர் AUD என்னும் மூளையின் கார்டெக்ஸ் அடுக்கு மெலிந்தும் சுருங்கும் பாதிப்பானது ஏற்படுகிறது. எனவே இதனை அடிப்படையாக வைத்து ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மனநல மருத்துவர் மற்றும் நடத்தையியல் நிபுணரான டிமோதி டுராஸ்ஸோ தலைமையிலான அமெரிக்க விஞ்ஞானிகள் குழு இந்த புதிய ஆய்வை நடத்தியது.

AUD

இதன் முலம் மது அருந்துவதை நிறுத்திய பிறகு 7.3 மாதங்களில் மூளையானது அதனால் மூளையில் ஏற்பட்ட எல்லா பாதிப்பினையும் விரைவாக தானாக சரிசெய்கிறது என்று இவ்வாய்வானது சுட்டி காட்டுகிறது.

இதற்கு முந்தைய ஆய்வானது குடிப்பழக்கத்தை நிறுத்திய பிறகு பாதிக்கப்பட்ட சில பகுதிகள் குணமடைகிறது என்று முந்தைய தெரிவிக்கிறது. ஆனால் எவ்வளவு காலங்களில் அது சரி செய்யப்படுகிறது என்பது குறித்து தெளிவாக விளக்கவில்லை. ஆனால் இவ்வாய்வில் குணமடையும் காலம் என்பது சரியாக கணிக்கப்பட்டுள்ளது.

ஆய்வின் விவரம்:

அமெரிக்காவில் சுமார் 16 மில்லியன் மக்கள் AUD நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இது ஒரு பொது நல பிரச்னையாக பார்க்கப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூளையின் முடிவெடுக்கும் மற்றும் திட்டமிடும் திறன் பாதிப்படைகிறது.

எனவே இவ்வாய்விற்காக AUD ஆல் பாதிக்கப்பட்ட 88 பேர் கலந்து தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். சுமார் 1 வாரம், 1 மாதம், 7.3 வது மாதங்களில் AUD ஆல் பாதிக்கப்பட்ட இவர்களின் மூளையானது ஸ்கேன் செய்யப்படுகிறது.

ஆனால் 23 நபர்கள் 1 வாரத்திற்கு எந்த வித ஸ்கேனையும் எடுக்கவில்லை. கலந்துகொண்ட 88 பேரில் 40 பேர் மட்டுமே முழு மாதத்திற்கும் மது அருந்தாமல் வைக்கப்படுகிறார்கள்,

இதனையடுத்து AUD ஆல் பாதிக்கப்படாத 45 பேர் இதில் கலந்து கொள்கின்றனர். இவர்களின் கார்டெக்ஸ் பகுதியின் தடிமனும் 9 மாதம் கழித்து ஸ்கேன் செய்து சோதனை செய்யப்படுகிறது. அதில் கார்டெக்ஸ் பகுதியானது 9 மாதங்களுக்கு முன்பு எப்படி இருந்ததோ அவ்வாறே 9 மாதங்களுக்கு பிறகும் இருந்தது என்பது இதன் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

இப்படி AUD ஆல் பாதிக்கப்பட்டவர்கள் 7.3 மாதத்தில் மது அருந்துவதை கைவிட்டவர்களின் மூளையானது இயல் நிலையை அடைகிறது” என்று இவ்வாய்வானது தெரிவிக்கிறது.