வண்ணக்குடைகள் PT
ஹெல்த்

வெயிலின் வெப்பத்திற்கு சிறந்தது கருப்பு குடையா? வண்ணக்குடையா?

Jayashree A

அதிகரித்து வரும் வெப்பத்திலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள, நிபுணர்கள், மருத்துவர்கள் என்று பலரும் நாம் உண்ணும் உணவிலிருந்து உடுத்தும் உடைவரை 'இப்படி இருந்தால் நலம்' என்று நமக்கு எச்சரிக்கை விடுத்துவந்தாலும், சில சமயங்களில் நாம் வெயிலின் வெப்பத்தை எதிர்நோக்க வேண்டியுள்ளது. அச்சமயங்களில் கண்களுக்கு கூலர், தலைக்கு தொப்பி, தவிர, குடை, தண்ணீர் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு வெளியில் இறங்குகிறோம். இதில் நாம் பயன்படுத்தும் குடையானது உண்மையில் வெப்பத்தை தடுக்கிறதா? என்றால் அது கேள்விக்குறிதான்.

இது குறித்து, இந்திய வானிலை ஆய்வுத் துறை (ஐஎம்டி) விஞ்ஞானி ஏ பிரசாத் தனியார் பத்திரிகை ஒன்றிற்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில்,

மக்கள் தங்களை வெப்பத்திலிருந்து தடுத்துக்கொள்ளும் பொருட்டு கையில் குடையுடன் செல்கின்றனர். இந்த குடையானது கருப்பு நிறத்தில் இருந்தால் நலம்.
ஏனெனில், கருப்பு குடை மட்டுமே சூரிய ஒளியிலிருந்து வரும் வெப்பத்தை உறிஞ்சி, அகச்சிவப்பு கதிர்வீச்சை வெளியிடுகிறது. இதனால் புற ஊதா கதிர்கள் நம் உடலை தாக்குவதில்லை.

அதே சமயத்தில் வெள்ளை குடைகள் மற்றும் பல வண்ணக்குடைகள் புற ஊதா கதிவீச்சை உள்ளே ஊடுருவ அனுமதிப்பதால், அது நம் தோலை பாதிக்கக்கூடும்” என்கிறார்.

ஆகவே, வண்ணக்குடைகளை தவிர்த்து கருப்புகுடைகளுக்கு மாறலாம் என்கிறார்.