ஹெல்த்

கோபமான இணையை கூல் செய்ய என்ன செய்யலாம்?.. தீர்வு காண இதோ 4 டிப்ஸ்!

கோபமான இணையை கூல் செய்ய என்ன செய்யலாம்?.. தீர்வு காண இதோ 4 டிப்ஸ்!

JananiGovindhan

காதலர்களோ, தம்பதிகளோ தங்களது இணையர்களுடன் முறையான நேரம் செலவிடாமல் போனாலோ அல்லது அவர்களை எந்த வகையிலாவது புறக்கணித்தாலோ அதற்கு எதிராக முதலில் கையில் வரும் ஆயுதமாக கோபமாகத்தான் இருக்கும். அந்த கோபத்தால் சாதாரண சண்டை கூட இருவருக்கும் இடையேயான பிரிவை ஏற்படுத்திவிடும்.

இந்த மாதிரி சிறிய விஷயங்களைக்கூட என்னவென்று பேசி நல்ல பேச்சுவார்த்தையை வளர்த்து என்ன பிரச்னையாக இருக்கும் என அறிந்துக்கொள்ளாமல் சுலபமாக கோபப்பட்டு அதனால் உறவை முறித்துக் கொள்வதால் அந்த நபரின் மீது வெறுப்பையே உமிழ வைக்கும். அப்படியான நபரை சமாளிக்க என்ன செய்வதென்று தெரியாமல் விழிப்பிதுங்கி இருப்போரும் உண்டு. அவர்களுக்கானதுதான் இந்த பதிவு.

என்ன செய்து உங்களின் கோபமான இணையரை சமாளிக்க முடியும், பிரச்னையை தீர்க்க முடியும் என்பதை காணலாம்:

மரியாதையும் உறுதியும்:

அவர்கள் மீதான உங்களது காதலோ, கோபமோ அது ஏன் என கண்ணியம் குறையாமல் எடுத்துரையுங்கள். உங்களுக்கான தேவை கோரிக்கைகள் என்ன என்பதை உறுதியாக எடுத்துச் சொல்லுங்கள். ஆனால் உரிய மரியாதையை கொடுங்கள். உங்களைத் தவறான வழியில் நடத்த முடியாது என்று துணையிடம் தைரியமாகச் சொல்லுங்கள். பரஸ்பரமான மரியாதையும் புரிதலும்தான் உறவுக்கு முக்கியம் என்பதை புரிந்து செயல்படுங்கள்.

பொறுமையே பெருமை:

கோபமாக பேசும் ஒவ்வொரு துணையின் பின்னால் சொல்லமுடியாத ஒரு பாதுகாப்பு தன்மையற்ற நபரும் இருப்பார். எப்போதெல்லாம் உங்களது இணையர் கோபம் கொள்கிறாரோ அவர்கள் பேசுவதை தடுக்காமல் செவிமடுத்து கேட்கலாம். கோபம் தணிந்த பிறகு அவர்களது பிரச்னை என்ன என்று கேட்டு தெளிவுபடுத்திக்கொள்ளுங்கள்.

தூண்டப்படும் வாதங்களை புரிந்துக்கொள்ளுதல்:

உங்களுடைய இணையர்கள் கோபத்தில் விடும் வார்த்தைகள் தூண்டிவிட்டு உங்களையும் பதிலுக்கு கோபமடையச் செய்யலாம். அப்படியான தூண்டும் வார்த்தைகளை அடையாளம் கண்டு, உங்கள் தரப்பு நியாயத்தை முறையாக எடுத்துச் சொல்லுங்கள். உங்களுக்கான
பொறுப்பை ஏற்பதிலிருந்து தயங்காமல் இருப்பதும் அவர்களை அவ்வாறு செய்யத் தூண்டும்.

உதாரணமாக வீட்டை சுத்தாம வைத்திருக்காமல் இருப்பது, எடுத்த இடத்தில் பொருட்களை வைக்காமல் போவது போன்ற பொறுப்பற்று இருத்தலும் கோபத்தை ஏற்படுத்தும். அதனை அறிந்து உணர்ந்து செயல்பட்டாலே பாதி பிரச்னை வராமல் இருக்கும்.

முரண்பாடுகளை புறக்கணித்தல்:

காதல் உறவில் முரண்பாடுகளை தவிர்ப்பதே மிகவும் நல்லது. ஏனெனில் முரண்பாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தால் அவை உறவில் உள்ள நல்ல விஷயங்களை நினைக்க வைக்காமல் செய்யும். ஆகவே இதுப்போன்ற தகராறில் இருந்து தள்ளியே இருங்கள். இருவருக்குமிடையே வெவ்வேறு மணப்பான்மை இருக்கும். பரஸ்பரமாக எண்ணங்களை ஏற்றுக்கொண்டாலே அங்கு பிரச்னைக்கு வழி இருக்காது.