ABC ஜூஸ்  முகநூல்
ஹெல்த்

சருமம் பள பளனு மின்னணுமா? இதய ஆரோக்கியம் வேணுமா? அதிக பயன்கொடுக்கும் A B C ஜூஸ்!

ஜெனிட்டா ரோஸ்லின்

மற்ற பழங்களில் தயாரிக்கப்படும், ஜூஸை ஒப்பிடும்போது, A - ஆப்பிள், B- பீட்ரூட், C- கேரட் கொண்டு தயாரிக்கப்படும் ABC ஜூஸின் சுவையானது குறைவாகவே இருக்கும்.

ஆனால், இந்த பழச்சாறை அருந்துவதால் ஏற்படும் நன்மைகள் என்னவென்று தெரிந்தால்... ”சுவையா முக்கியோ... ஒரு ABC ஜூஸ் குடுங்கப்பா” என்று நம்மில் பலரும் கேட்டு வாங்கி குடிப்போம். ஆப்பிள், பீட்ரூட், கேரட் இவை மூன்றுமே ஊட்டசத்துக்கள் நிறைந்த உணவுகள். இவற்றை சேர்த்து பழச்சாறாக எடுத்து கொள்ளும்போது சரும நலம், இதய ஆரோக்கியம் என பலவிதமான நன்மைகள் உண்டாகும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதய ஆரோக்கியம்

ABC ஜூஸ் இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கிய பங்காற்றுகிறது.

ஆப்பில் - இதில் உள்ள நார்சத்துக்கள் மற்றும் ஆக்சிடெண்டுகள் இதய நோய் ஏற்படுவதை குறைக்கிறது.

பீட்ரூட் - இதில் உள்ள நைட்ரேட்டுகள் ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.

கேரட் - கேரட்டை பொறுத்தவரை ரத்த அழுத்தத்தை சீராக்க உதவுகிறது.

ஆக, இவை மூன்றும் இதயத்தில் ஏற்படும் கோளாறுகளை சரிசெய்து, இதய நோய் ஏற்படாமல் தடுப்பதிலும், தவிர்ப்பதிலும் முக்கிய பங்காற்றுகிறது.

உடலுக்கு நல்ல ஆற்றலையும் ஆரோக்கியத்தையும் தருகிறது!

இயற்கையான இனிப்புகளான ஆப்பிள், கேரட் உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்குகிறது. பீட்ரூட் ரத்த ஓட்டத்தை சீராக்குவதோடு, உடலின் உள்ள தசைகளுக்கு ஆக்சிஜன் சரியாக சென்று சேருவதற்கும் உதவுகிறது.

உடல் எடையை சீராக வைத்து கொள்ள!

இந்த வகையான ஜூஸில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் இருப்பதால், உடல் எடையை சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது. இதை தொடர்ந்து எடுத்துக்கொள்ளும்போது, உடல் எடை குறையவும், அதிக நேரம் பசியை தாங்கும் சக்தியையும் வழங்குகிறது. ஆக, மற்ற பழச்சாறுகளை காட்டிலும் இதை உண்பது நன்மை பயக்கும்.

சருமம் பளபளக்கும்

நம்மில் பலர் சருமம் பளபளப்பாக இருக்க என்ன செய்ய வேண்டும் என்று யாரை பார்த்தாலும் கேட்பதை வழக்கமாக வைத்திருப்போம். ஆக, இதற்கான ஒரே வழி ABC ஜூஸ் பருகுவதுதான்.

பீட்ரூட்டில் உள்ள நச்சு நீக்கும் பண்பு முகத்தில் பருக்கள் போன்ற பிரச்சனை ஏற்படாமல் தவிர்த்து சருமத்தை பொலிவுடன் வைத்து கொள்ள உதவி புரியும். மேலும், இதில் உள்ள ஆன்டி ஆக்சிடெண்டுகள் , வைட்டமின்கள் சருமத்திற்கு பொலிவையும், ஆரோக்கியத்தையும் உண்டாக்கும். குறிப்பாக இதில் உள்ள கேரட் வெயிலிருந்து வரும் புற ஊதாக்கதிர்களிடமிருந்து நம் சருமத்தை பாதுகாக்கிறது.

நோயெதிர்ப்பு மற்றும் செரிமானம் சார்ந்த பிரச்னைகள்

நார்ச்சத்து நிறைந்து காணப்படும் ஆப்பிள், சீரான செரிமானத்திற்கும், கேரட் குடல் இயக்கத்திற்கும் முக்கிய பங்காற்றுகிறது. மேலும், இவை மலச்சிக்கல் பிரச்னையை தடுத்து, குடலை ஆரோக்கியத்துடன் வைத்துக்கொள்ள வழிவகை செய்கிறது. மேலும், இது நோய் கிருமிகளை எதிர்த்து போராடி உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

எனவே, இத்தனை நன்மை பயக்கும் ABC ஜூஸை வாங்கி பருக அடுத்த முறை மறக்க வேண்டாம்!!!