நம் அன்றாட வாழ்வில் அங்கம் வகிக்கும் ஒன்றாக மாறிவிட்டது சர்க்கரை. காலையில் டீ, காபியில் தொடங்கி இரவு உறங்கும்போது அருந்தும் பால் வரை சர்க்கரையின்றி அமையாது உலகு என்றே கூறலாம். ஆனால், இப்படி அளவிற்கு அதிகமாக சர்க்கரை எடுத்து கொள்வது உடலுக்கு பல பிரச்சனைகளை உருவாக்கும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தியாவில் அதிக அளவில் பொதுமக்கள் சர்க்கரையை பயன்படுத்தி வருவதாக ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றனர். இது குறித்து பல மருத்துவர்கள் தெரிவித்தாலும், அதை காமெடி ரீல்ஸாக மாற்றி, ‘என்னால அத விடமுடியாது’ என்று கடந்து சென்று விடுகின்றனர் மக்கள்.
இந்தவகையில், சர்க்கரையை அதிக அளவில் எடுத்து கொண்டால், எது மாதிரியாக அபாயங்கள் உண்டாகும் என்று விளக்குகிறார் சர்க்கரை நோய் சிகிச்சை நிபுணர் வினோத் பிரேம் ஆனந்த்.
” சர்க்கரை நோய் நிபுணர்களை பொறுத்தவரை கடந்த 10 வருடங்களாக இந்திய மக்கள் சர்க்கரை எடுத்தும் கொள்ளும் அளவை குறைத்து கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்து வருகிறோம்.
ஆனால், சுகர் மில்ஸ் அசோசியேஸன் தெரிவிக்கும் தரவுகள் என்னவென்றால், 2023 ல் இந்தியர்கள் எடுத்துக்கொள்ளும் சர்க்கரையின் அளவு 25 மில்லியன் மெட்ரிக்டன் எனவும், 2024 ஆம் ஆண்டில் 27 மில்லியன் மெட்ரிக் டன் அளவு சர்க்கரையை உபயோத்துள்ளனர் என்று தெரிவிக்கிறது. இந்தியாவை பொறுத்தவரை சர்க்கரை குறைந்த அளவே எடுத்து கொள்ள வேண்டும்.
நாம் உண்ணும் உணவில் மறைமுகமாகவும், அதிகளவு சர்க்கரை உள்ளது. ஜாம் போன்றவற்றில் அதிகளவு சர்க்கரை சேர்க்கப்படுகிறது. ஆனால், கேக்,பிஸ்கெட் போன்ற இந்த உணவுகளில் ஐரோப்பா, அமெரிக்கா போன்ற நாடுகளில் பயன்படுத்தப்படும் சர்க்கரையின் அளவு போதுமான அளவை தாண்டவில்லை. ஆனால், இங்கு 3 லிருந்து 5 மடங்கு வரை சர்க்கரை அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது.
சர்க்கரை வியாதி என்பது உடல்பருமன், இதயம் தொடர்பான நோய்கள், சிறுநீரகம் மட்டும் பாதிப்பை உண்டாக்காது. குழந்தை பிறப்பில் பாதிப்பை ஏற்படுத்துவதிலும் சர்க்கரை வியாதி முக்கிய காரணம். சர்க்கரை வியாதி உள்ளவர்களை பொருத்தவரை நாட்டு சர்க்கரை, வெள்ளம், தேன், வெள்ளை சர்க்கரை,பனங்கற்கண்டு என எதையுமே எடுத்துக்கொள்ள கூடாது.
நமது முன்னோர்களை காட்டிலும் தற்போது உள்ள தலைமுறையினர் அதிக அளவு சர்க்கரையை எடுத்து கொள்கிறார்கள். கேக் உள்ளிட்ட உணவுப்பொருட்களில் சர்க்கரை அளவு அதிகளவில் உள்ளது. ஆகவே,கடையிலிருந்து ஒரு பொருளை வாங்கும்போது, அதில் சேர்க்கப்பட்டுள்ள உணவுப்பொருட்கள் என்ன என்பதை கூர்ந்து கவனித்து பின்னர் வாங்க வேண்டும். 30-40 வயதுடையோர் சர்க்கரை பயன்பாட்டை குறைக்க வேண்டும்.
ஆகவே, சர்க்கரை பாதிப்பு வரும் முன்பே நல்ல உடற்பயிற்சி, நடைப்பயிற்சியை மேற்கொண்டு ஆரோக்கியமான வாழ்க்கை முறையை உருவாக்குவதாக