ஆண்டி பயாடிக் மருந்துகள் முகநூல்
ஹெல்த்

10 லட்சம் உயிரிழப்புகளா! ஆண்டி பயாடிக் மருந்துகளை உட்கொள்வது குறித்து ஆய்வுதரும் அதிர்ச்சி முடிவுகள்

PT WEB

செய்தியாளர்: சுகன்யா

ஆண்டி பயாடிக் மருந்துகளை அதிகமாக உட்கொள்வதால் இந்தியாவில் ஆண்டுக்கு 10 லட்சம் உயிரிழப்புகள் நேரிடுவதாக இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபல மருத்துவ ஆய்வு இதழான லான்செட் தெரிவித்துள்ளது.

இது யாராருக்கான எச்சரிக்கை மணி.. சற்று அலசலாம்...

பாக்டீரியா நுண்ணுயிரிகளால் ஏற்படும் நோய்களைக் குணப்படுத்த மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் மருந்துகளே, ஆன்டிபயாட்டிக்ஸ் ((Antibiotics)) என அழைக்கப்படுகின்றன. இயற்கையாக நம் உடலில் உள்ள எதிர்ப்புச் சக்தி செய்யவேண்டிய வேலையை, நாம் எடுத்துக்கொள்ளும் ஆன்டிபயாட்டிக் மருந்து செய்கிறது.

ஆன்டிபயாடிக்கை அதன் செயல்பாட்டின் அடிப்படையில் இரண்டு வகையாகப் பிரிக்கலாம். நம்முடைய உடலுக்குள் நுழைந்து நோய் ஏற்படுத்தும் நுண்ணுயிரிகளை அழிக்கும் பணிகளைச் செய்யும் ஆன்டிபயாடிக், பாக்டீரிசைடல் ((Bactericidal)) என்று அழைக்கப்படுகிறது. நுண்ணுயிரிகளின் வளர்ச்சியை மட்டும் தடுத்து நிறுத்தக்கூடிய ஆன்டிபயாட்டிக் பாக்டீரியோஸ்டேட்டிக் ((Bacteriostatic)) என்று அழைக்கப்படுகிறது.

ஆன்டிபயாட்டிக் மருந்து ஒருவருக்குத் தேவையா? இல்லையா என்பதை அறிய நோயாளியின் இரத்தம், சிறுநீர், புண் சீழ் போன்றவற்றில் உள்ள கிருமிகளை வைத்து, அவை எந்த மருந்துக்குக் கட்டுப்படுகின்றன என்று பரிசோதிக்கப்படும். இந்தப் பரிசோதனைக்கு கல்ச்சர் அண்டு சென்சிட்டிவிட்டி சோதனை என்று பெயர். இதன் முடிவுகள் தெரிய 48 மணி நேரம் முதல் 72 மணி நேரம் வரை ஆகும்.

பரிசோதனையின் அடிப்படையில் வயது, உடல் எடை, நோய் பாதிப்பின் தன்மை ஆகியவற்றுக்கு ஏற்றாற் போல மருந்துகளின் அளவு பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால் மருத்துவர்களின் பரிந்துரையின்றி மருந்துகளை உட்கொள்ளுதல் சரியானது அல்ல என்றும் கூறுகிறார்.

ஒவ்வொரு மருத்துவமனையிலும் ஆன்டிபயாட்டிக் மருந்துகளை நோயாளிகளுக்கு எந்த அளவிற்கு பயன்படுத்த வேண்டும் என தனித்தனியே விதிகள் இருக்கின்றன. மருத்துவர்களின் பரிந்துரையின்றி மருந்து, மாத்திரைகளை நீண்ட காலம் உட்கொள்வது சிக்கல் தான் என்கிறது மருத்துவ ஆய்வு முடிவுகள்.