ஹெல்த்

”உடல் எடைக்கு பரம்பரை ஒரு காரணமாக இருக்கலாமா?” - டாக்டர் அக்‌ஷயா நாகப்பனின் விரிவான பேட்டி

”உடல் எடைக்கு பரம்பரை ஒரு காரணமாக இருக்கலாமா?” - டாக்டர் அக்‌ஷயா நாகப்பனின் விரிவான பேட்டி

webteam

பெண்களுக்கு எடை எவ்வளவு முக்கியம்? ஆரோக்கியத்திற்கு எடை மிகவும் முக்கியமாகக் கருதப்படுவதால் இது குறித்து விரிவாகப் டாக்டர் அக்‌ஷயா நாகப்பன் அவர்கள் விளக்கமளித்துள்ளார்.

ஒவ்வொரு மக்களுக்கும் ஆரோக்கியமான எடை எவ்வளவு முக்கியம்? அதில் குறிப்பாக பெண்களுக்கு இது எவ்வளவு முக்கியம்?

ஆரோக்கியமான எடை எல்லா வயதினருக்கும் அவசியமான ஒன்று. அது குழந்தைகளாகட்டும், முதியவர்களாகட்டும், அந்த அந்த வயதினருக்கேற்ப உடல் ஆரோக்கியம் மிகவும் அவசியமான ஒன்றாகும். எடை அதிகரிக்க, அதிகரிக்க... சக்கரை நோய், PCOD cardiovascular இப்படி பட்ட வியாதிகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக எடை அதிகரிக்கும் பெண்களுக்கு இத்தகைய பிரச்சனை வருவதற்கு வாய்ப்புகள் அதிகம். குறிப்பாக கருவுற்ற பெண்கள், எடை அதிகரிக்கும்பொழுது, உடல் உபாதைகள் அதிகரிக்கும். ஆகவே ஆரோக்கியமான உடல் எடை அனைவருக்கும் நலம்.

ஒருவர் ஆரோக்கியமான உடல் எடையுடன் இருக்கிறார் என்பதை எப்படி தெரிந்துக்கொள்வது?

இதற்கு சிம்பிளான இரண்டு விஷயங்கள் உள்ளது.

1. ideal body weight உதாரணத்திற்கு ஒருவர் 157CM உயரம் கொண்டவராக இருப்பவரென்றால், 100 கழிக்க வேண்டும். ஆக அவரது உடல் எடை 57 kg யாக இருக்கவேண்டும். 

2.BMI (Body Mass Index) இதில், 18.5 இருந்தால் குறைந்த எடை என்றும், 24.9 மேல் இருந்தால் அதிக எடை என்றும், சொல்வார்கள். இது அவரவர்களைப்பொறுத்து வேறுபடும். உதாரணத்திற்கு, ஒரு விளையாட்டு வீராங்கனை எடை அதிகமாக இருக்கும் அதே சமயம் சதை குறைவாக இருக்கும்.
waist hip ratio = waist ratio/ Hip ratio இதில் 0.9 ஆணுக்கும், 0.85 பெண்ணுக்கும் இருக்கவேண்டும். இதற்கு மேல் அதிகமாக காணப்பட்டால் அவர்கள் ஆரோக்கியமான எடையில் இல்லை என்றுக்கொள்ளலாம்.

எந்த நேரத்தில் எடை அதிகரித்திருக்கிறது என்பதை தெரிந்துக்கொண்டு மருத்துவரிடம் ஆலோசனை பெறவேண்டும்?

திடீரென்று 2 அல்லது 3 மாதத்தில் ஒருவருக்கு எடை அதிகரிக்கும். உடல் உபாதைகள் வரும் சமயம் எடை அதிகரித்து இருக்க வாய்ப்புள்ளது. அப்பொழுது மருத்துவரை அணுகி நமது உணவு கட்டுப்பாடு மற்றும், உடற்பயிற்சி ஆகியவற்றிற்கு ஆலோசனை பெற்று, நாமாகவே உடல் எடையை குறைத்துக்கொள்ள முயலலாம். இருந்தாலும் தொடர்ந்து எடை அதிகரித்தாலோ அல்லது குறைந்தாலோ நீங்கள் மருத்துவரை அணுகுதல் நலம்.

திடீரென்று உடல் எடை அதிகரிப்பதற்கும், குறைவதற்கும் காரணம் என்னவாக இருக்கும்?

லைஃப் ஸ்டைல் மாற்றம் ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம். அதைத் தவிர, மன அழுத்தம், தூக்கமின்மை, இதை தவிர உடல் உபாதைகளாலும் உடல் எடை அதிகரிக்க காரணம் உள்ளது. தைராய்டு pcod போன்ற உபாதைகள் இருக்கும் சமயத்தில் ஒரு இரத்தமாதிரி எடுத்து பார்த்தால் அதற்கான காரணம் தெரியும்.

தூக்கம் ஒருவருக்கு எந்தளவு முக்கியம்?

ஒருவருக்கு குறைந்த பட்சம், 6 லிருந்து 8 மணிநேர தூக்கம் மிகவும் முக்கியமான ஒன்று. சிலர் 8 மணி நேரம் தூங்கினாலும் ஆழ்ந்த தூக்கம் இருக்காது. இன்னும் சிலர், இரவுநேர பணி முடித்து பகலில் தூங்குவர். இப்படி பட்டவர்களுக்கு உடலில் கிரஹலின் , லேப்டன் என்ற இரண்டு ஹார்மோன்ஸ்களில் கிரஹலின் அதிகப்படியாக சுரக்கும் இது பசியை அதிகரிக்கும் ஹார்மோன்ஸ் ஆகும் ஆகவே இரவில் சரியாக தூங்காதவர்கள் அதிகமாக சாப்பிட்டு அதனால் உடல் எடை அதிகரிக்கும்.

நினைத்த நேரத்தில் சாப்பிடுவது எந்தளவிற்கு குறைபாடு கொண்டது?

சாப்பிடும் நேரத்தில் ஒரு ஒழுங்கை கடை பிடிக்காமல் இருப்பது, நேரம் தவறி சாப்பிடுவது, மற்றும், அதிகப்படியாக சாப்பிடுவது இதற்கு உடல் ஒத்துழைப்பு தராது ஆகையால் உடல் எடை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

ஆரோக்கியமான எடையைத் தக்கவைத்துக்கொள்ள என்ன என்ன நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்?

டயட் கண்ட்ரோல் மிகவும் அவசியம். சுகர் கம்மி பண்ணவேண்டும், பூமிக்கு அடியில் விளையும் காய்கறிகளை அதிகம் எடுத்துக்கொள்ளக்கூடாது. fried food, fatty faoods தவிற்கவேண்டும். improper lifestyle இருக்ககூடாது சரியான நேரத்திற்கு சாப்பிட வேண்டும். தூக்கம் சரியான நேரத்திற்கு இருக்கவேண்டும். stress இருக்கக்கூடாது. உங்க behaviour attitude இது எல்லாமே உங்களின் எடையை தக்கவைத்துக்கொள்ள உதவும்

50 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான உணவு பழக்கவழக்கங்கள், வாழ்க்கை முறை எப்படி இருக்கவேண்டும்?

50 வயதிற்கு பிறகு உடலில் பல மாற்றங்கள் தோன்றும், அதற்கு காரணம், வயது முதிர்வு ஒரு காரணம், மேலும் மெட்டொபாலிசம் குறைய ஆரம்பித்துவிடும். ஆகயால், சாப்பிடும் உணவு ஆரோக்கியமாக இருக்கவேண்டும். சிறுதானிய உணவு, கீரைகள், மற்றும், புரத சத்து நிறைந்த உணவு வகைகள் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளலாம். பருப்பு வகைகள், உலர் பழங்கள் இவற்றை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இவர்களுக்கு கால்சியம், மெக்னீசியம், விட்டமின் d3 தேவைப்படும். மூன்றையும் சம விகிதத்தில் எடுத்துக்கொள்ளவேண்டும். எந்த மருந்தையும் டாக்டரின் ஆலோசனை பெறாமல் எடுத்துக்கொள்ளக்கூடாது.

உடல் எடைக்கு பரம்பரை ஒரு காரணமாக இருக்கலாமா?

அது ஒரு முக்கியமான செய்தியாக சொல்லமாட்டேன். ஒரு குடும்பத்தில் அனைவரும் எடை கூட இருப்பவர்களாக இருந்தால் அவர்களும் உடல் பருமனாக இருக்க வாய்ப்பு உள்ளது, அதற்கு காரணம், குடும்பத்தின் உணவு பழக்கவழக்கம் மற்றும், வாழ்க்கை முறை இதை நம்மால் நிச்சயமாக சரி செய்ய முடியும். உடற்பயிற்சி உணவு கட்டுப்பாட்டு முறை இதில் உடலின் ஆரோக்கியத்தை கட்டுக்குள் கொண்டு வர இயலும்.

ஒருவரின் எடை அதிகரிக்கவும், குறைக்கவும் எந்தெந்த விஷயங்களை கடைப்பிடிக்க வேண்டும்?

சிலர் சாப்பாட்டின் அளவை அதிகரித்து எடையை அதிகரிக்க விரும்புவார்கள். அவர்களுக்கு எடை அதிகரிப்பதற்கு மாற்றாக, தொப்பை விழுந்துவிடும். ஆகவே சிறிது சாப்பிட்டாலும் சத்தான உணவை சாப்பிடவேண்டும். உணவில் அதிகளவு புரோட்டீன் எடுத்துக் கொள்ள வேண்டும். நியூட்ரின் அதிகளவு உள்ள உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். உடல் உழைப்பு மிக அவசியம். க்ரீன் டீ எடுத்துக்கொள்ளலாம். இது இரு வேறுபட்டவர்களுக்கும் பொருந்தும்.

உடல் எடையும் அவர்களின் நடவடிக்கையும் இதில் உள்ள ஒற்றுமை ?

நிறைய ஒல்லியாக இருப்பவர்கள், ஆக்டிவிட்டியாக இருக்கமாட்டார்கள். அதற்கு காரணம். நான் தான் ஒல்லியாக இருக்கிறேனே எதற்கு உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்ற எண்ணம் வரும். ஆகவே பருமனாக இருப்பவர்கள் ஆக்டிவாக இருப்பார்கள் என்பது எனது எண்ணம். ஒல்லியாக இருப்பவர்களுக்கும் PCOD பிரச்சனையும் வரும். எல்லாருக்கும் எல்லா பிரச்சனைகளும் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. ஆக உடற்பயிற்சி மற்றும் உணாவு கட்டுப்பாடு உள்ளவர்கள் தான் ஆரோக்கியமாக இருப்பார்கள்.

ஒரு பெண் மகப்பேறு காலம் முடிந்ததும் அதிக எடை போடுவார்கள். அவர்கள் உடல் எடையை குறைக்க என்னென்ன நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்?

ஒரு பெண் கருவுற்றுருக்கும் கால கட்டத்தில் உடல் எடை அதிகரிக்க வேண்டும் என நினைத்து அதிகமாக உணவு எடுத்துக்கொள்வார்கள். அது சரியானது அல்ல.. இதனால் குழந்தை பிறந்த பின்னர் அவரின் உடல் பருமன் சற்று தான் குறைவாக இருக்கும். அதே போல் பால் குடிக்கும் குழந்தை இருக்கும் சமயத்தில் அவர்கள் உடல் பருமனை குறைப்பதற்கு அவசியம் இல்லை.

மகப்பேறு காலம் முடிந்தவுடன் சில பெண்கள் திடீரென்று உடல் எடையை குறைத்துக்கொள்கிறார்கள். இவர்களுக்கு உண்டான அறிவுரை என்ன?

அவ்வாறு, தானாக விரும்பி இத்தகைய செயலில் இறங்கக்கூடாது. குறைந்தது 6 மாத்திற்கு பின்னால் கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக்கொள்ள வேண்டும். முற்றிலுமாக ஒரே தடவையாக குறைத்துக்கொள்ளக்கூடாது. அதேபோல் மருத்துவரின் ஆலோசனை பெற்று உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். நண்பர்கள் சொல்வது, மற்றும் வீடியோக்களை கவனித்து உடற்பயிற்சி மேற்கொள்ளுதல் கூடாது.

பெண்களுக்கு எந்த எந்த காலகட்டத்தில் உடல் எடை அதிகரிக்கும் ? உடல் எடை குறையும்?

மெனோபாஸ் டயத்தில் எடை அதிகரிக்கும். அதேபோல், 50 வயதை கடந்தவர்களின் எடை குறையக்கூடும். இந்த சமயத்தில் சத்தான உணவு சாப்பிடுவது அவர்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

ஆண்களுக்கு எந்த சமயத்தில் எடை அதிகரிக்கும் அல்லது குறையும்?

ஆண்களைப் பொருத்த வரையில் ஹார்மோன் வேறுபாடு குறைவாக தான் இருக்கும். ஆகவே, அவர்களுக்கு இதற்கான ஒரு வயது காலகட்டம் ஏதும் கிடையாது. தீயபழக்கத்தில் இருப்பவர்களுக்கும், உடல் உழைப்பே இல்லாதவர்களுக்கும் எடை கூடும் அல்லது குறையக்கூடும்.

ஹெல்தியான எடையை கொண்டிருப்பவர்களுக்கு ஏற்படும் நன்மைகள் என்ன?

முக்கியமாக மருந்து செலவுகள் குறையும். வாழ்க்கையின் தரம் உயரும், உடல் உறுப்புகளில் நெகிழ்வு தன்மை அதிகரிக்கும், அடுத்தவர்களின் உதவியை எதிர்பார்த்து இருக்க வேண்டாம். எடை என்பது ஒரு எண் மட்டும் தான் என்று நினைத்து வாழ்ந்தால் அவர்களால் எல்லாமே சாத்தியமாகக்கூடும்.

எல்லாரும் சரியான ஒரு ஆலோசகரின் அறிவுரை பெற்று, உடற்பயிற்சி மற்றும், உணவு கட்டுப்பட்டை கடைபிடித்து ஆரோக்கியமாக வாழலாம்.

இதை பற்றிய முழு வீடியோவையும் காண: