முன்கூட்டியே மார்பகப் புற்றுநோய் கண்டறியும் மிராய் ஏஐ புதிய தலைமுறை
ஹெல்த்

இனி மார்பகப் புற்றுநோய் பாதிப்பை 5 வருடங்களுக்கு முன்பே அறியலாம்... மாஸ் காட்டும் AI டெக்னாலஜி!

ஜெ.நிவேதா

இன்றைய தேதியில் பெண்களை அதிகம் பாதிக்கும் புற்றுநோயாக இருப்பது, மார்பகப் புற்றுநோய். எனில் ஆண்களுக்கு இந்த நோய் ஏற்படுவதில்லையா என்றால், இல்லை. யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படக்கூடும் அபாயம் உள்ளது. ஆகவே விரைந்து இதை கண்டறிய வேண்டிய கடமை நமக்கு உள்ளது.

இதை கருத்தில் கொண்டு, மருத்துவ உலகில் விஞ்ஞானிகள் ஒரு மாபெரும் புரட்சியை நிகழ்த்தியுள்ளனர். அதன்படி, இந்த வகை புற்றுநோயை 5 வருடங்களுக்கு முன்பாகவே நம்மால் கண்டறிய முடியும் என்கின்றனர் அமெரிக்க மருத்துவர்கள். இதை சாத்தியப்படுத்தியது, AI எனப்படும் செயற்கை நுண்ணறிவுத்திறன்.

AI Mirai

அதன்படி அமெரிக்காவின் மாசாசூசெட்ஸ் பல்கலைக்கழகம், ஜமீல் கிளினிக் ஆகியவை இணைந்து மார்பகப் புற்றுநோயை முன்கூட்டியே கண்டறியும் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பத்தை கண்டுபிடித்து உள்ளன. இதற்கு ‘மிராய்’ என்று பெயரிடப்பட்டு உள்ளது. கடந்த 2021-ம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த தொழில்நுட்பம் அமெரிக்காவின் பல்வேறு மருத்துவமனைகளில் தற்போது அறிமுகம் செய்யப்பட்டு இருப்பதாக தெரிகிறது.

இந்த வகை பரிசோதனை, இன்னும் இந்தியாவில் வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒருவேளை வந்தால், நமக்கு என்னென்ன நன்மைகளெல்லாம் கிடைக்கலாம் என்று உங்களுக்கும் தோன்றுகிறது இல்லையா? அதை நமக்கு சொல்கிறார்,

‘புற்றுநோயை கண்டறியும் இமேஜிங் ஸ்பெஷலிஸ்ட்’ மற்றும் மருத்துவர் சத்யஸ்ரீ.

மருத்துவர் சத்யஸ்ரீ

இத்துடன், மார்பகப் புற்றுநோய் யாருக்கெல்லாம் வரக்கூடும், இன்றைய தேதியில் இந்தியாவில் மார்பகப் புற்றுநோய்க்கு உள்ள சிகிச்சைகள் என்னென்ன என்பது குறித்தும் அவர் நம்மோடு பல விஷயங்களை பகிர்ந்துகொள்கிறார்.

இவை அனைத்து குறித்தும் மருத்துவர் கூறுவனவற்றை விரிவாக, கீழ் இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் அறியலாம்....