தடை செய்யப்பட்ட மருந்து web
ஹெல்த்

13 ஆண்டுக்கு முன் தடை செய்யப்பட்ட மருந்து.. இப்போதும் குழந்தைகளுக்கு பரிந்துரைக்கப்படும் அவலம்!

12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தடைசெய்யப்பட்ட மருந்தை மருத்துவர்கள் இப்போதுவரை பரிந்துரைப்பது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் விழிப்புணர்வு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

PT WEB

13 ஆண்டுகளுக்கு முன்பு தடை விதிக்கப்பட்ட மருந்து தற்போதும் குழந்தைகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு வருவதால் மருத்துவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

என்ன மருந்து? எதற்காக வழங்கப்படுகிறது?

நிம்சுலைடு எனும் வலி நிவாரணி மருந்து, கல்லீரல் பாதிப்பை ஏற்படுத்தும் வேதிப்பொருளை உருவாக்குவது தெரியவந்தது. இதையடுத்து, இந்த மருந்தை 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு வழங்க மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் (13 ஆண்டுகளுக்கு முன்பு) தடை விதித்திருந்தது.

தடை செய்யப்பட்ட மருந்து

இந்த நிலையில், இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனங்களை கண்காணிக்கும் ஐ.பி.சி. சமீபத்தில் நடத்திய ஆய்வில், நிம்சுலைடு மருந்து தற்போதும் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வருவது தெரியவந்தது. இதையடுத்து போஸ்டர்கள் மூலம், மருத்துவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியில் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இப்போதுவரை இம்மருந்துகள் விநியோகத்தில் இருப்பது, அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.