மார்பக புற்றுநோய் முகநூல்
ஹெல்த்

மகாராஷ்ட்டிரா பெண்ணுக்கு செய்யப்பட்ட நவீன சிகிச்சை... மார்பக புற்றுநோயாளிகளுக்கு நற்செய்தி!

மார்பக புற்றுநோயாளிகளுக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் மகாராஷ்ட்டிராவில் உள்ள சிட்டி மருத்துவமனையில் 42 வயது பெண்ணுக்கு டைட்டானியத்தால் ஆன மெஷ் பொருத்தப்பட்டிருக்கிறது.

PT WEB

மார்பக புற்றுநோயாளிகளுக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் மகாராஷ்ட்டிராவில் உள்ள சிட்டி மருத்துவமனையில் 42 வயது பெண்ணுக்கு டைட்டானியத்தால் ஆன மெஷ் பொருத்தப்பட்டிருக்கிறது.

குறிப்பிட்ட அந்த பெண்ணுக்கு கடந்த ஜூலையில் மார்பக புற்றுநோயின் மூன்றாம் நிலை கண்டறியப்பட்டிருக்கிறது. புற்றுநோய் கட்டியின் அளவும் 2 சென்டிமீட்டர் அளவிற்கு இருந்திருக்கிறது. நோயின் தீவிரத்தால் அந்த பெண்ணுக்கு உடனடியாக கீமோதெரபி கொடுக்க மருத்துவர்கள் முடிவு செய்திருக்கிறார்கள்.

மார்பகப் புற்றுநோய்

தொடர்ச்சியாக, ஆகஸ்ட் மாதத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருக்கிறது. இரண்டு மார்பகங்களையும் இழந்த பெண்ணுக்கு ஹெச்.என். ரிலையன்ஸ் மருத்துவமனையில் டைட்டானியத்தால் ஆன மெஷ் (மார்பகம் போன்ற அமைப்பை கொடுக்கும்) பொருத்தியதாக அந்த மருத்துவமனையில் புற்றுநோய் பிரிவின் தலைவர் மருத்துவர் ஹரிபக்தி தெரிவித்துள்ளார்.

தங்கள் இலக்கு புற்றுநோயை சரிசெய்வது மட்டுமல்ல எனத் தெரிவித்த அவர், அந்த பெண் தன்னம்பிக்கையுடன் வாழ வகை செய்ய வேண்டும் என்பதற்காக டைட்டானியம் மெஷ் பொருத்தியதாக தெரிவித்தார். இதற்காக, சிலிகானால் ஆன மார்பகங்களை வடிவமைத்து அதனை டைட்டானியம் மெஷ் பாக்கெட்டில் வைத்து பொருத்தியதாக கூறியுள்ளார்.

silicone mesh

பார்ப்பதற்கு இயற்கையான மார்பங்களைப் போன்றும் அதிக வடுக்கள் இல்லாமலும், தோள்பட்டை அசைவுகளின்போது மாற்றங்கள் ஏற்படாமலும் இருக்கும் என மருத்துவர் ஹரிபக்தி கூறியுள்ளார். விலங்குகளின் திசுக்கள் இதற்கு பயன்படுத்தப்படவில்லை என்றும் இந்த டைட்டானியம் மெஷ்ஷால் எவ்வித அலர்ஜியும் ஏற்படாது எனவும் அவர் கூறியுள்ளார்.