கோவிட் 19 பாதிப்பு  முகநூல்
ஹெல்த்

”கோவிட் பாதிப்பிலிருந்து மீண்டவர்களில் 6% பேர் இறந்து விட்டனர்” - தமிழக சுகாதாரத்துறை ஆய்வில் தகவல்

மார்ச் 2020 முதல் மார்ச் 2022 வரையில் கோவிட் பாதிப்பிலிருந்து மீண்டவர்களில் 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதத்திற்குள் 6 சதவீத பேர் இறந்து விட்டனர் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஜெனிட்டா ரோஸ்லின்

மார்ச் 2020 முதல் மார்ச் 2022 வரையில் கோவிட் பாதிப்பிலிருந்து மீண்டவர்கள் 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதத்திற்குள் 6 சதவீத பேர் இறந்து விட்டனர் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

தமிழக சுகாதார துறை நடத்திய ஆய்வு ஒன்றில் மார்ச் 2020-2022 ஆம் ஆண்டு வரை கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்டவர்களில் 6 சதவீத பேர் இறந்துவிட்டனர்.

மேலும் 61-80 வயதினை உடையவர்கள் 20 சதவீதம் பேரும் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் 1 சதவீதத்திலும் இறந்துள்ளதாக தெரிவிக்கின்றது.

இந்த ஆய்வானது சென்னை மருத்துவக் கல்லூரியில் உள்ள மருத்துவர்கள், பொது சுகாதார அதிகாரிகளுடன் சேர்ந்து சென்னை தவிர மற்ற பகுதிகளை சேர்ந்த 1220 நோயாளிகளை கொண்டு நடத்தப்பட்டது. மேலும் 73 நோயாளிகள் இதன் மூலம் இறந்து விட்டனர் என்று இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

537.pdf
Preview

இது குறித்து இவ்வாய்வின் மூத்த ஆசிரியர்களில் ஒருவரான செல்வவிநாயகம் கூறுகையில், “ இந்த ஆய்வானது கோவிட்டில் இருந்த மீண்டவர்களுக்கு அதன்பிறகு ஏற்படும் அறிகுறிகள் என்ன? ,மேலும் அவற்றை அறிந்து கொள்வதை அடிப்படையாக கொண்டு அமைகிறது.கோவிட் பிந்தைய அறிகுறி,வயது, இயற்கை காரணங்கள் போன்றவை இறப்பிற்கான காரணமாக இருக்கிறது.

குழந்தைகளிடம் இதனால் ஏற்படும் இறப்பு என்பது குறைவாகவும், 10 வயதுக்குட்பட்டவர்களில் பூஜ்ஜியமாகவும் உள்ளது. மேலும், புற்றுநோய், இதய செயலிழப்பு, தொடை எலும்புக்கு தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக இரத்த விநியோகம் இழப்பு போன்றவை கோவிட்டுக்கு பிறகு ஏற்படக்கூடிய காரணங்களாகவும், இதுவும் மரணத்திற்கான காரணமாகவும் அமைகிறது.

கூடுதலாக, ஐந்து நோயாளிகளில் ஒருவர் தொடர்ந்து கோவிட் தொற்றின் நோய் அறிகுறிகளை அனுபவித்து வருகின்றார்கள். பசியின்மை மற்றும் தொடர்ச்சியான சோர்வு போன்றவைகள் கோவிட் நோய்க்கு பிந்தைய அறிகுறிகளாக பார்க்கப்படுகிறது.

மேலும் கோவிட் பாதிப்பின் இரண்டாவது அலையில் 2021-ல் கிட்டத்தட்ட 60 சதவிகித நோயாளிகள் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 41 சதவிகிதம் பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தொடை எலும்பில் ரத்த ஓட்டம் செயலிழக்கும் அவாஸ்குலர் நெக்ரோசிஸ் பாதிப்பு 87 சதவிகித நோயாளிகளில் கோவிட் தொற்றுக்குப் பிறகு மட்டுமே பதிவாகியுள்ளது.கோவிட் தொற்று ஏற்பட்ட அடுத்த 3 ஆண்டுகளில் நடத்தப்பட்ட பல ஆய்வுகளில் இதுவும் ஒன்றாகும்.” என்று தெரிவித்துள்ளார்.