தற்போது பெரும்பாலானோருக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்னை வயிற்றுசதை. இப்போது ஒருவரை பார்க்கும்போது பெரும்பாலும் கவனிக்கிற விஷயமும் அதுவாகத்தான் இருக்கிறது. வயிற்றுசதை என்பது ஆரோக்கியமற்ற தன்மையை காட்டுகிறது. ஆரோக்கியமற்ற சதையை குறைத்து ஃபிட்டாக இருப்பது அவசியம். மூன்றே மூன்று எளிய பயிற்சிகள் ஃப்ளாட்டான வயிற்றுப்பகுதியை பெற உதவும்.
Planks
தரையில் குப்புறப்படுக்கவும். மேற்புற உடலை முழங்கைகளாலும், கீழ்புற உடலை பாதங்களாலும் தாங்கி நிறுத்தவும். இதேநிலையில் 30 நொடிகள் தொடர்ந்து இருக்கவும். நாளுக்கு நாள் நேரத்தை அதிகரித்து தினமும் 2 நிமிடங்கள் வரை இந்த பயிற்சியை மேற்கொள்ளலாம்.
Dead bugs
நேராக படுத்துக்கொள்ளவும். கைகளும், கால்களும் தரைக்கு செங்குத்தாக இருக்கும்படி நீட்டி உயர்த்தவும். பாதம் தரைக்கு நேராக இருக்கும்படி முழங்காலை 90 டிகிரி கோணத்தில் மடக்கவும். வலதுகையால் இடதுகாலை பிடித்து முன்பாக கொண்டுவரவும். அதேபோல் இடதுகையால் வலதுகாலை பிடித்து முன்பாக கொண்டுவரவும். இதை 20 முறை இரண்டுகால்களுக்கும் மாறிமாறி செய்யவும்.
V-ups
தரையில் நேராகப் படுக்கவும். இடுப்புப்பகுதி மட்டும் தரையில் இருக்குமாறு கைகள் மற்றும் கால்களை ஒன்றாக உயர்த்தி தொடவும். மீண்டும் பழைய நிலையை அடையவும். இதை 10 முறை செய்யவேண்டும்.
இந்த மூன்று பயிற்சிகளை தினசரி செய்தாலே சீக்கிரத்தில் வயிற்றுச்சதையை குறைத்து மெலிந்த இடையை பெறலாம். இது இடுப்புப்பகுதியை மட்டுமல்லாமல் தொடைப்பகுதியையும் குறைக்க உதவும்.