அப்பல்லோ நடத்திய மார்பக புற்றுநோய்க்கான ஆய்வில் 40 வயதுக்குட்பட்ட இந்திய பெண்களில் கால் பகுதிக்கும் அதிகமானோருக்கு அதாவது 25 சதவீதம் பேர் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர் என்று கண்டறியப்பட்டுள்ளது.
சுமார் 1,50,000 மார்பகத்துக்கான மருத்துவ பரிசோதனையில் மேற்கொள்ளப்பட்டதில் இளம் வயதிலேயே பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர் என்று தெரிவிக்கிறது. மேலும், இந்திய பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான சராசரி வயதை ஆராய்ந்த போது அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளை காட்டிலும் இளம் வயதிலேயே பாதிக்கப்படுகின்றனர் என்றும் தெரிவிக்கிறது.
இந்த ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டவை என்னவென்றால்,
இந்திய பெண்களில் மார்பக புற்றுநோயை கண்டறிவதற்கான சராசரி வயது 53 ஆக இருந்தது. ஆனால் தற்போது 39 வயது மற்றும் அதற்கு குறைவாகவே இருக்கிறத. மேலும் இவ்வயதில்தான் 25 சதவீத பெண்கள் இப்புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கிறது.
அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தை பொறுத்தமட்டில் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுவர்களின் சராசரி வயது என்பது 62 மற்றும் அதற்கு குறைவாகவே இருக்கிறது.
கூடுதலாக இத்தரவின் மூலம் பாதிக்கப்படுவர்களின் சராசரி வயது என்பது 2018-2023 வரை உள்ள ஆண்டுகளில் 53 வயதினரும், ஜனவரி 2022-ஆகஸ்ட் 2023 வரை உள்ள ஆண்டில் 52 வயதை உடையவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்று தெரிவிக்கிறது.
மேலும் மார்பக மருத்துவ பரிசோதனையானது 23 சதவீதத்தில் ஒவ்வொருக்கும் தனிப்பட்ட அடிப்படையில் மேமோகிராஃபி பரிசோதனையானது செய்யப்பட்டு இதன் மூலம் 11.2 சதவீத பேருக்கு மார்பக புற்று நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அப்போலோவின் ப்ரிவென்டிவ் ஹெல்த் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் சத்யா ஸ்ரீராம் இது குறித்து கூறுகையில்,
“மார்பக புற்றுநோயை கண்டறிவதற்கான வயது என்று 40 வயது என்று உலகளாவிய அளவில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் வளர்ந்து வரும் நிலப்பரப்பு போன்ற பல்வேறு காரணங்களினால் குறிப்பாக இந்திய பெண்களுக்கு இவ்வயதிற்கு முன்பே மார்பக பரிசோதனையினை செய்து கொள்வது நல்லது. குறிப்பாக குடும்பத்தில் யாராவது பாதிக்கப்பட்டிருந்தால் முன்கூட்டியே மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது நல்லது.” என்று தெரித்துள்ளார்.
மேமோகிராம் என்பது மார்பகத்தின் எக்ஸ்ரே ஆகும் . பெண்களுக்கு மார்பகப் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதற்கு மேமோகிராம்கள் சிறந்த வழியாகும். இப்பரிசோதனையின் மூலம் பெரும்பாலான பெண்களுக்கு மார்பக புற்றுநோயின் அறிகுறி இருக்கிறதா? என்று கண்டறிய மேமோகிராம் சிறந்த வழியாகும்.