சிறப்புக் களம்

நடுத்தர மக்களின் ஊட்டி‌ ஏலகிரி

நடுத்தர மக்களின் ஊட்டி‌ ஏலகிரி

webteam

சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களுக்கு அருகிலுள்ள அருமையான சுற்றுலாத்தலங்களில் ஒன்று ஏலகிரி. ஆண்டின்
அனைத்து மாதங்களிலும் இதமான சூழல் நிலவும் இந்த மலைவாழிடம் குறித்து பார்க்கலாம்.

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள ஏலகிரி மலை அதிக வெயிலும், மழையும் இல்லாமல் சீதோஷ்ணநிலை
உள்ள இடம். இங்கு 14 கொண்டை ஊசி வளைவுகளும், பசுமைப்பள்ளத்தாக்குகளும். ஏலகிரியை சின்ன ஊட்டி என்று
அழைக்க வைக்கின்றன. கடல் மட்டத்திலிருந்து 3,400 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த அழகிய இடம் நடுத்தர
குடும்பங்கள் குறைந்த செலவில் கண்டு ரசிக்கக்கூடிய இடமாக இருக்கிறது.

அத்னாவூர் ஏரியில் படகு சவாரி, சிறுவர் பூங்கா, அரசுத்தோட்டம், நடை பயண பாதை, பரண் இல்லம், புங்கனூர் ஏரி
போன்றவை பார்த்து ரசிக்க ஏற்ற இடங்கள்.புங்கனூர் ஏரியின் அருகிலேயே மூலிகைப்பண்ணை அமைந்துள்ளது. ஏலகிரி
மலை உச்சியில் அமைந்துள்ள முருகன் கோயிலில் இருந்து பார்த்தால் ஏலகிரியின் முழு அழகையும் பார்த்து ரசிக்கலாம்.
மலையேற்றப் பயிற்சி மற்றும் அட்வெஞ்சர் ஸ்போர்ட்ஸ் எனப்படும் பாரா கிளைடிங், ராக் கிளைம்பிங்
விளையாட்டுகளுக்கும் இங்கு உள்ளன. தமிழகத்திலேயே இங்குதான் "பாரா கிளைடிங்' எனப்படும் பாரசூட்டில்
பறப்பதற்கான பயிற்சி வழங்கப்படுகிறது. வேலூரில் இருந்து 91 கிலோ மீட்டர் தூரம் திருப்பத்தூர் ரோட்டில் பொன்னேரி
கிராமம் வழியாக ஏலகிரி மலைக்கு செல்லலாம். 14 அழகான, கொண்டை ஊசி வளைவுகளைக் கடந்து ஏலகிரி மலையை
அடையலாம்.

சென்னை, பெங்களுரு, கோவை நகரங்களில் இருந்து தேசிய நெடுஞ்சாலை வழியாக வழியாக ஏலகிரி வரலாம்..சென்னை
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து தினமும் காலை 6.1‌0 மணிக்கு நேரடி பேருந்தும் உள்ளது.சென்னை,
பெங்களுரு விமான நிலையங்கள் வந்து அங்கிருந்தும் ஏலகிரி வரலாம். பேருந்து மற்றும் ரயில் மூலம் ஏலகிரிக்கு
வரவேண்டும் எனில் ஜோலார்பேட்டையில் இறங்கி வர வேண்டும். ஜோலார்பேட்டை ஜங்ஷனில் இருந்து 19
கிலோமீட்டரில், ஏலகிரி அமைந்துள்ளது. இங்கு வரும் மே மாதம் 19 மற்றும் 20 தேதிகளில் கோடை விழா நடைபெற
உள்ளது.