சிறப்புக் களம்

விவசாயிகளுக்கு ஆதரவு: பச்சைக்கு மாறியது சமூக வலைதள பக்கங்கள்!

விவசாயிகளுக்கு ஆதரவு: பச்சைக்கு மாறியது சமூக வலைதள பக்கங்கள்!

webteam

டெல்லியில் 19 வது நாளாகப் போராட்டம் நடத்திவரும் விவசாயிகளுக்கு பல அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள், இளைஞர்கள், மாணவர்கள் என பல்வேறு தரப்பினரும் தங்களது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர்.

விவசாயிகளுக்கு எதிராக மத்திய அரசு ஹைட்ரோகார்பன் போன்ற பல திட்டங்களைச் செயல்படுவத்துவதாகவும், வறட்சி நிவாரணம், விவசாய கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் போராட்டம் நடத்தி வருகின்றனர். தொடர்ந்து மத்திய அரசு விவசாயிகளை வஞ்சித்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுகிறது. தொடர்ந்து 19 நாட்களாக நடக்கும் போரட்டத்துக்குப் பின்னும் கோரிக்கைகளை மத்திய அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது, வேதனை அளிக்கிறது என விவசாயிகள் தெரிவித்து வருகின்றனர்,

இந்நிலையில், விவசாயிகளுக்கு ஆதரவாக நெட்டிசன்கள், சமூக வலைதங்களில் தங்களது முகப்பு புகைப்படத்தை பச்சை வண்ணமாக வைத்து, போராட்டத்துக்கு ஆதரவளித்து வருகின்றனர். வாட்ஸ் அப், பேஸ்புக், டிவிட்டர் போன்றவற்றின் முகப்பு புகைப்படத்தை (டிஸ்பிளே பிக்சர்) விவசாயத்தைக் காப்போம் என்ற வாசகத்துடன் வைத்து ஆதரவு அளித்து வருகின்றனர்.