தந்தையர் தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, மகள்கள் எல்லாம் “மகள்களை பெற்ற அப்பாக்களுக்குதான் தெரியும் முத்தம் காமத்தில் சேர்ந்தது இல்லை” என்றும், மகன்கள் எல்லாம் “தெய்வங்கள் எல்லாம் தோற்றேப்போகும் தந்தை அன்பின் முன்னே” என்றும் சமூக வலைதளங்களில் பதிவுகளை பகிர்ந்து தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்தார்கள்.
அப்பாக்களுக்கான நாளை கொண்டாடும் வேளையில் ஒற்றைப் பெற்றோர்களும் ஏன் கொண்டாடப்பட கூடாது? குறிப்பாக சிங்கிள் மதர்கள். தாய்மார்களுக்குத்தான் அன்னையர் தினம் என தனியாக நாள் இருக்கும்போது ஏன் தந்தையர் தினத்திலும் ஈடுபடுத்த வேண்டும், முழுக்க முழுக்க அப்பாக்களுக்கான நாளாகவே இருக்கக் கூடாதா என கேள்விகள் எழலாம்.
ஆனால், கணவனால் கைவிடப்பட்ட, கணவனை இழந்த, உறவினர்களின் உதவியில்லாமல் தன் குழந்தைகளை வளர்த்து, வளர்க்க பாடுபட்டு வரும் அனைத்து தாய்மார்களும் தந்தையர் தினத்தன்று கொண்டாடப்பட வேண்டியவர்கள்தான்.
ஏனெனில் தந்தையின் பொறுப்பையும் ஏற்று தாய்க்கு தாயாகவும் அரவணைத்து, அன்பு, பாசம் என எல்லாவற்றையும் ஒரேசேர நிரப்பி, ஒற்றையாளாகப் பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கும் single motherகளின் பங்கு வார்த்தையால் விவரிக்க முடியாதவைதான். அதன் காரணமாகவே தந்தையர் தினத்தன்று ஒற்றை தாய்மார்களும் கொண்டாடப்பட வேண்டியவர்களாக உள்ளனர்.
Pew Research Centerன் ஆய்வில் 2017ம் ஆண்டில் அமெரிக்கா 25 சதவிகித குழந்தைகள் ஒற்றை பெற்றோர்கள் வசம்தான் வாழ்ந்தார்கள். அதுவும் 84 சதவிகிதம் பேர் சிங்கிள் மதர்களாம். இது 1910ம் ஆண்டு தந்தையர் தினம் முதல் முதலில் கொண்டு வரப்பட்ட போது முதன்மையானதாக இருக்கவில்லை. ஆனால் அப்பாக்களின் பொறுப்பை அம்மாக்களே ஏற்று நடக்கும்போது தந்தையர் தினத்தன்று ஒற்றை அம்மாக்களைக் கொண்டாடுவதில் தவறில்லை என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இது மனைவியை இழந்த கணவர்கள், அதாவது ஒற்றை தந்ப்பிதையர்களுக்கும் பொருந்தும். இருனும் அம்மாக்களையும், அப்பாக்களையும் அவர்களுக்கான நாட்களில் மட்டுமல்லாமல் தினசரி கொண்டாடினாலும் எந்த குறையும் ஏற்பட்டிடாது. ஏனெனில் அவர்கள் இல்லாத நாளை யோசித்துதான் பார்க்க முடியுமா?
ஒற்றைப் பெற்றோர்களைக் குறிப்பாக அம்மாக்களை எப்படியெல்லாம் கொண்டாடலாம்?
1) சமூக வலைதளங்கள் வாயிலாக அம்மாக்களை சிறப்பிக்கலாம். அவர்களுக்கு பிடித்தமானவர்களை வீடியோ கால் மூலம் ஒருங்கிணைத்து அவர்களுடன் அளவளாவ வைக்கலாம்.
2) ஒற்றைப் பெற்றோராக இருப்பது சவாலான விஷயமாக இருப்பதால், அவர்களுக்கு நன்றி கூறி மகிழ்வித்து கொண்டாடலாம். இதன் மூலம் அவர்கள் தங்களது பெற்றோர் பணிகளை மேற்கொள்ள உந்துதலாக இருக்கும்.
3) ஓடிடி தளங்கள் கொட்டிக்கிடக்கும் இந்த வேளையில் அம்மாக்களுடனான நினைவலைகளை மேலும் மேம்படுத்த இந்த தந்தையர் தினத்தில் இருவரும் இணைந்து படம் பார்க்கலாம்.
4) ஒற்றை அம்மாவோ, அப்பாவோ அவர்களுக்கு பிடித்தமான உணவுகளை சாப்பிடவைக்க புதுமையான ரெஸ்டாரண்ட்களுக்கு அழைத்துச் செல்லலாம் அல்லது ஆர்டர் செய்து வீட்டிலேயே சாப்பிடலாம்.
5) தனது குழந்தைகளை வளர்ப்பதற்காக ஒற்றை பெற்றோர்கள் தங்களது கனவுகள் லட்சியங்களை கிடப்பில் போட்டிருப்பார்கள். அது என்ன என கண்டறிந்து அதனை மேற்கொள்ள அவர்களுக்கு பிள்ளைகள் உதவலாம்.
- ஜனனி கோவிந்தன்
ALSO READ: