சிறப்புக் களம்

கொரோனா கால மகத்துவர்: ஆட்டோக்களில் ஆக்சிஜன் சிலிண்டர் சேவை வழங்கும் 'வியாசை தோழர்கள்'!

கொரோனா கால மகத்துவர்: ஆட்டோக்களில் ஆக்சிஜன் சிலிண்டர் சேவை வழங்கும் 'வியாசை தோழர்கள்'!

நிவேதா ஜெகராஜா

சென்னையில் 5-க்கும் மேற்பட்ட ஆட்டோக்களில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் வைத்து கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்து வருகிறது ஒரு தன்னார்வ அமைப்பு.

பழைய காலத்து சென்னை என்று அறியப்படும் வியாசர்பாடியில் பத்தாண்டுகளாகவே கல்வி உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் உதவி செய்து வருகின்றனர் வியாசை தோழர்கள் அமைப்பினர். தற்போது கொரோனா வைரஸ் பெரும் தொற்று காரணமாக இந்தியா முழுவதும் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவிவருகிறது. தமிழகமும் அதனால் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகின்றது. ஆக்சிஜன் சிலிண்டர் கிடைக்கப்பெறாதவர்கள் ஆம்புலன்சில் ஆக்சிஜன் சிலிண்டர் இல்லாதவர்களுக்கு உதவி செய்யும் வகையில் வியாசை தோழர்கள் அமைப்பினர் தங்களின் உதவியை செய்து வருகின்றனர்.

இந்த தன்னார்வ அமைப்பினர் ஐந்திற்கும் மேற்பட்ட ஆட்டோக்களில் ஆக்சிஜன் சிலிண்டர் வைத்து கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு உள்ளான நோயாளிகளுக்கு உதவி செய்து வருகிறார்கள். மருத்துவமனைக்கு அழைத்து செல்வது, ஒரு மருத்துவமனையில் இருந்து மற்றொரு மருத்துவமனைக்கு மாற்றம் செய்யும்போது இந்த ஆட்டோக்களில் அவர்களை அழைத்து செல்கிறார்கள்.

இதுதவிர மருத்துவமனையிலிருந்து சிகிச்சை முடிந்து செல்லும் நபர்களையும் 5 ஆட்டோக்களின் மூலமாக அவர்களது வீட்டுக்கு அனுப்பி வைப்பது போன்ற பணிகளில் இந்த அமைப்பு செய்து வருகிறது. இந்த கொரோனா தொற்று சரியாகும் வரை தங்களால் முடிந்த உதவியை சென்னை மக்களுக்கு நாங்கள் செய்வோம் என்று அவர்கள் தெரிவிக்கிறார்கள்.

வியாசை தோழர்களை தொடர்பு கொள்ள

• 8189976293
• 8807445857

- சுபாஷ் பிரபு