விண்ணில் செலுத்தப்படும் ராக்கெட் WebTeam
சிறப்புக் களம்

விண்வெளியை சுத்திக்காட்ட போறேன்; நிலாவில் வீடு கட்டப்போறேன்! ஸ்பேஸ் ஸ்டேஷன்,ஸ்பேஸ் டிராவல்-ஓர் அலசல்

அமெரிக்கா, ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் பூமியைச் சுற்றி உள்ள வளிமண்டலத்தில் ஒரு ஸ்பேஸ் ஸ்டேஷனை உருவாக்கி, அதில் ஆராய்சியையும் மேற்கொண்டு வருவது தெரியும்.

Jayashree A

விண்வெளியில் பல்வேறு விதமான ஆராய்சிகளை செய்வதற்காக உலக நாடுகள் பலவும் போட்டி போட்டுக்கொண்டு அதை செயல் படுத்தி வருகிறது. இதில் இந்தியாவும் ஒன்று.

இந்தியா நிலவின் தென் துருவப்பகுதியில் சந்திரயான் விண்கலத்தை தரையிறக்கி வெற்றிகரமாக தனது ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகிறது. அடுத்த நகர்வாக சூரியனை ஆய்வு செய்வதற்காக, ஆதித்யா எல்1 விண்கலத்தை அனுப்பியுள்ளது. இது இவ்வாறு இருக்க, அமெரிக்கா, ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் பூமியைச் சுற்றி உள்ள வளிமண்டலத்தில் ஒரு ஸ்பேஸ் ஸ்டேஷன் ஒன்றை உருவாக்கி, அதில் ஆராய்ச்சியையும் மேற்கொண்டு வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இது என்ன ஆராய்ச்சி? இதனால் என்ன சாத்தியம் என்பதை பற்றி விரிவாக காணலாம்.

சந்திரயான் 3

பூமி வளிமண்டலத்தின் சுற்றுவட்டப்பாதையில் முதன் முதலாக சோவியத் யூனியன் (தற்போது இல்லை) ’மிர்’ என்ற ஒரு ஸ்பேஸ் ஸ்டேஷனை அமைத்து அதில் சில ஆராய்ச்சிகளை மேற்க்கொண்டு வெற்றியும் பெற்றது. ஆனால், அது காலாவதியாகி விடவே, அது பின்னாலில் கைவிட்டது. இதனைத் தொடர்ந்து அமெரிக்கா, ரஷ்யா, கனடா ஆகிய நாடுகள் இணைந்து விண்வெளியில் இண்டர்நேஷனல் ஸ்பேஸ் ஸ்டேஷன் (International Space Station) ஒன்றை உறுவாக்கி, அதில் ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகிறது. சீனா அதன் பங்கிற்கு தனியாக ஒரு ’ஸ்பேஸ் ஸ்டேஷனை’ உருவாக்கி அதில் ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகிறது. வரும் காலத்தில் இந்தியாவும் இத்தகைய ஸ்பேஸ் ஸ்டேஷனை நிறுத்தி ஆய்வுகளை மேற்கொள்ளும்.

ஸ்பேஸ் ஸ்டேஷனின் உபயோகம் என்ன?

விண்வெளியில் இருக்கும் ஸ்பேஸ் ஸ்டேஷனானது 4 வால்வோ பஸ்ஸை ஒன்றாக இணைத்தால் எவ்வளவு பெரிய இடமாக இருக்குமோ அத்தனை பெரிய இடத்தை இந்த ஸ்பேஸ் ஸ்டேஷனானது கொண்டிருக்கும். இதில் மூன்று அறிவியல் ஆய்வாளர்கள் தங்கக்கூடிய வகையில் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டிருக்கும். இந்த ஸ்பேஸ் ஸ்டேஷன் பூமியின் சுற்றுவட்டப்பாதையில் சுற்றிக்கொண்டே தனது ஆராய்ச்சியை மேற்கொண்டபடி இருக்கும். ஆனால், அவ்விடத்தில் புவியீர்ப்பு விசை இருக்காது. இதற்காக தான் அங்கு பலவித ஆராய்ச்சிகள் நடைப்பெற்று வருகிறது.

புவியீர்ப்பு விசையும் எடையின் தன்மையும்

குறிப்பாக புவியீர்ப்பு விசை இல்லாத ஒரு இடத்தில் மனிதன் எப்படி இயங்குகிறான்? இதனால் அவனுக்கு உண்டாகும் உடல் உபாதைகள் என்னென்ன? விண்வெளிக்கு பயணம் மேற்கொள்ளும் மனிதன் எப்படி இயக்கபடவேண்டும்? என்பதைத் தவிர பல வித ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால், (உதாரணத்திற்கு தண்ணீரும், எண்ணெய்யும்) பூமியில் இரு உலோகத்தை கலந்தால், அதில் எடை அதிகமாக இருப்பது கீழாகவும் எடை குறைவாக இருப்பது மேலாகவும் இயங்கும் தன்மையை பெற்று இருக்கும். ஆனால் புவியீர்ப்பு விசை இல்லாத ஒரு இடத்தில், உலோகத்தின் எடையானது சரியான விகிதத்தில் இருக்கும். ஆகவே முக்கியமான வெவ்வேறு எடைக்கொண்ட தனிமங்கள், புரோட்டன்ஸ் இவற்றை கொண்டு ஆராய்ச்சி செய்வதற்காக ’ஸ்பேஸ் ஸ்டேஷன்’ செயல்பட்டு வருகிறது.

தவனை முறையில் ஆராய்ச்சி செய்யும் விண்வெளி வீரர்கள்

அத்தகைய ஆராய்ச்சிக்காக இங்கிருந்து செல்லும் விண்வெளி வீரர்கள் ஸ்பேஸ் ஸ்டேஷனில் தவனை சுற்றின் அடிப்படையில் ஆராய்ச்சியை மேற்கொள்கின்றனர். அதன்படி கடந்த மாதம் அமெரிக்காவிலிருந்து மூன்று விண்வெளி வீரர்கள் ஸ்பேஸ் ஸ்டேஷனுக்கு சென்றனர். அங்கு ஏற்கனவே ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த விஞ்ஞானிகளை விடுவித்தார்கள். இதில் சில வீரர்கள் வருட கணக்கில் ஆராய்ச்சி செய்வதும் உண்டு. அங்கு பணிபுரியும் ஆய்வாளர்களின் உடல் நிலை, சீராக இயங்குவதைத் தெரிந்துக்கொள்ள, அவர்களின் மீது ஒரு சிப் பொருத்தப்பட்டிருக்கும் அதன் மூலம் வீரர்களின் நடத்தைகளையும் அவர்களின் உடல் நலத்தையும் பூமியிலிருந்து கவனித்து வருவார்கள்.

விண்வெளியில் 20 பேர் இதுவரை உயிரிழப்பு

உலக நாடுகள் விண்வெளி ஆராய்சியை சுமார் 60 வருடங்களாக நடத்தி வருகின்றன. இந்த ஆராய்ச்சி பணிகளின் போது விண்வெளியில் விபத்தில் 20 வீரர்கள் இறந்துள்ளனர். 1986, 2003ல் நாசா விண்வெளி அராய்ச்சி நிறுவனம் அனுப்பிய விண்கலத்தில் 14 பேரும்,1971ம் ஆண்டு சோவியத் யூனியன் அனுப்பிய 11 விண்வெளி வீரர்களில் 3 பேரும், 1967 ல் அப்பல்லோ1 ஏவுதளத்தில் 3 பேரும் இறந்துள்ளனர்.

விண்வெளியில் வீரர்கள் இறந்தால்...

இப்படி ஏதாவது ஒரு அசம்பாவிதம் ஸ்பேஸ் ஸ்டேஷனில் நடந்தால் விண்வெளியிலிருந்து இறந்தவர்களின் உடலை சில மணி நேரங்களில் ஒரு சிறிய கலன் மூலம் பூமிக்கு அனுப்ப முடியும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

இதே அசம்பாவிதம் சந்திரனில் நடந்தால் இறந்தவர்களின் உடலானது பூமியை வந்தடைய மேலும் சில நாட்கள் அல்லது வாரங்கள் ஆகலாம்.

ஒரு வேளை செவ்வாய் கிரகத்தில் இறந்தால்.. 

ஆனால் இதே செவ்வாய் கிரகத்தில் அல்லது, பூமியிலிருந்து சுமார் 300 மீட்டர் தொலைவில் ஒரு விண்வெளி வீரர் இறந்தால், அந்த உடலை உடனடியாக பூமிக்கு எடுத்து வர இயலாது. ஆகவே உடலை பத்திரப்படுத்தி வைத்துக்கொண்டு, (அதற்கான பிரத்யேக பை) விண்வெளி வீரர்கள் திரும்பி பூமிக்கு வரும் சமயத்தில் தான் இறந்த அந்த உடலையும் கொண்டு வர முடியும் என்கிறார்கள்.

ஸ்பேஸ் டிராவல் (Space Travel)

ஸ்பேஸ் டிராவல் அதாவது விண்வெளி சுற்றுலா என்பது அகண்ட விண்வெளியிலிருந்து பூமியையும் அதன் சுழற்சியையும் காண்பதற்காக, விண்வெளிக்கு மனிதர்களை அழைத்து செல்வதை சமீப காலமாக சில நிறுவனங்கள் செய்ய முயற்சித்து வருகின்றது. இதன் ஆரம்ப கட்டமாக சென்ற மாதம் அமெரிக்காவின் ’virgin galactic’ என்ற நிறுவனம் ஸ்பேஸ் டிராவல் செய்வதற்காக 6 பேரை தேர்வு செய்து விண்வெளிக்கு சுற்றுலா அனுப்பியது.

விண்வெளி சுற்றுலாவால் என்ன நன்மை??

பூமியின் வளிமண்டலத்தைத் தாண்டி கார்மன் லைன் (karman line) என்ற ஒரு எல்லை உண்டு. இந்த எல்லையைத் தாண்டி 100 கிலோமீட்டர் உயரம் சென்றால் ஸ்பேஸ் என்று கூறுவார்கள். இதே கார்மன் லைனை தாண்டி கிழே 100 கிலோ மீட்டர் இறங்கினால் பூமி. இதுதான் விண்வெளிக்கும் பூமிக்கும் இருக்கும் வித்தியாசம். இதன் எல்லைக்கோடுதான் கார்மன் லைன் (karman line).

1975-77 OTRAG என்ற ஜெர்மன் கம்பெனிதான் ஸ்பேஸுக்கு மனிதர்களை அனுப்பும் எண்ணத்தை கொண்டிருந்தது. ஆனால் யாரையும் அனுப்பவில்லை. கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி தான் முதல் முறையாக 'virgin galactic' என்ற UK கம்பெனி முதன்முறையாக விண்வெளிக்கு ஆறு மனிதர்களை சுற்றுலா பயணிகளாக கொண்டு சென்று திரும்பி உள்ளது.

ஸ்பேஸ் டூரிசம் (Space tourism) இப்பொழுது அவசியமா?

ஸ்பேஸ் டூரிசம் இப்பொழுது அவசியமா என்றால், இது சாதாரண மக்களுக்கு அவசியம் இல்லை. ஆனால், இவ்வாறு சுற்றுலா கூட்டிச்செல்வதால் பெறப்படும் பெரும் தொகையானது, ஸ்பேஸின் ஆராய்சிக்கு பயன்படுத்தப்படும் என்கிறார்கள் அறிவியல் ஆராய்சியாளர்கள்.

இதைத் தவிர, ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு செல்லும் விமான நேரத்தை ஸ்பேஸ் பிளைட் மிச்சப்படுத்துகிறது என்கிறார்கள். ஏனெனில், பூமியை விட்டு அகன்று ஸ்பேஸில் பயணப்பட்டு குறைந்த நேரத்தில் செல்ல வேண்டிய இடத்தை சென்று அடைந்து விடும். அதற்கு முன்னோட்டமாகவும் இந்த விண்வெளி பயணமானது உதவும் என்கிறார்கள் ஆராய்சியாளர்கள்.

ஸ்பேஸ் X , OTRAG, virgin galactic போன்ற தனியார் நிறுவனங்கள் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தை கொண்டுள்ளது.

ஆக... அடுத்த சில வருடங்களில் நாமும் விண்வெளிக்கு சுற்றுலா மேற்கொள்ளலாம்.