சிறப்புக் களம்

ஆல்கஹால் குடிப்பது பெண்களுக்கு பிறப்புறுப்பு வறட்சியை ஏற்படுத்துகிறதா? - ஆய்வில் அதிர்ச்சி

ஆல்கஹால் குடிப்பது பெண்களுக்கு பிறப்புறுப்பு வறட்சியை ஏற்படுத்துகிறதா? - ஆய்வில் அதிர்ச்சி

Sinekadhara

மெனோபாஸ், மன அழுத்தம், மன பதற்றம், மோசமான உணவுப்பழக்கம் போன்ற பல்வேறு காரணங்களால் பெண்களுக்கு பிறப்புறுப்பு வறட்சி ஏற்படுகிறது. ஆனால், வார இறுதிநாட்களில் நண்பர்களுடன் ஹாயாக ஒரு காக்டெய்ல் பார்ட்டிக்கு சென்றுவருவதும் இந்த லிஸ்ட்டில் சேர்ந்திருக்கிறது. தங்கள் இணையுடன் உடலுறவு கொள்வதற்கு முன்பு, ஒரு க்ளாஸ் வைன் அருந்திவிட்டு தொடங்குவதை வழக்கமாக கொண்டிருப்பவர்கள் இதனை மீண்டும் ஒருமுறை யோசித்து பார்ப்பது நல்லது என்கிறது சமீபத்திய ஆய்வு. காரணம், ஆல்கஹால் பிறப்புறுப்பு வறட்சியை ஏற்படுத்தி உடலுறவின்போது வலியை கொடுக்கும் என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டிருக்கிறது.

பிறப்புறுப்பு வறட்சியில் ஆல்கஹால் எவ்வாறு பங்களிக்கிறது?

நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான அமெரிக்க மையங்களின் கருத்துப்படி, ஆண்களை விட பெண்களின் உடலானது மதுவை வித்தியாசமாக உறிஞ்சுகின்றன. மெட்டபாலிசமும் ஆண்களிலிருந்து பெண்களுக்கு வேறுபடுகிறது. கூடுதலாக, பெண்களின் ரத்தத்தில் சேரும் ஆல்கஹாலின் அளவானது ஆண்களைவிட அதிகமாம். ஆல்கஹால் அருந்தும் பெண்களுக்கு கீழ்க்கண்ட பிரச்னைகள் வரும் வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது.

1. கருவுறுதல் பிரச்னை
2. உடற்பருமன்
3. தூக்க பிரச்னை
4. ஆற்றல் பிரச்னை
5. கல்லீரல் பிரச்னை
6. ஹைபர் டென்ஷன்
7. இதய நோய்கள்
8. உயர் கொழுப்பு

மதுபானம் பெண்களின் பாலியல் ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கிறது?

லிபிடோ மற்றும் பாலியல் ஆசையை ஆல்கஹால் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது. ஆனால், பல ஆய்வுகள் இந்த விஷயத்தில் பலதரப்பட்ட கருத்துக்களை முன்வைக்கின்றன. இதுகுறித்து பயோடெக்னாலஜி தகவலுக்கான தேசிய மையம் நடத்திய ஆய்விலும் பலதரப்பட்ட கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆனால், பெண்கள் எந்த அளவுக்கு ஆல்கஹால் உட்கொள்கிறார்கள் என்பதை பொறுத்தே அதன் பலன்களும் தாக்கங்களும் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது. அதிக குடிப்பழக்கம் அல்லது மதுவைச் சார்ந்திருப்பது பாலியல் ஆர்வம், பாலியல் தூண்டுதலில் குறைவு மற்றும் உச்சம் அடைவதற்கான திறனை மாற்றியமைக்கலாம் எனவும் கூறுகிறது.

ஆல்கஹால் ஆண், பெண் இருபாலரின் பாலியல் கவலைகளை சமாளிக்க உதவும் என்கின்றனர் நிபுணர்கள். இருப்பினும், இது பெண்களுக்கு பிறப்புறுப்பு வறட்சியை ஏற்படுத்தும். இதனால் பாலியல் உறவுகொள்ள ஆசை இருந்தாலும், பிறப்புறுப்பில் உயவூட்டுதல் இருக்காது. மத்திய நரம்பு மண்டலமானது பாலியல் ஆசை, தூண்டுதல் மற்றும் உச்சக்கட்டத்திற்கு அவசியம். ஆனால் ஆல்கஹால் மத்திய நரம்பு மண்டலத்தை பலவீனப்படுத்துகிறது என்பது கசப்பான உண்மை. கூடுதலாக, இது நீரிழப்புக்கு வழிவகுப்பதால் உடலுறவின் போது அசௌகரியத்தையும் ஏற்படுத்தும். உடல் வறட்சியானது, பிறப்புறுப்புக்கு செல்லும் ரத்தம் மற்றும் ஆக்சிஜன் சுழற்சியை குறைப்பதால் லிபிடோ சுரப்பும் பாதிக்கப்படுகிறது. இதனால் தலைவலி, மயக்கம், குறைந்த லிபிடோ சுரப்பு போன்ற பிரச்னைகளை சந்திக்க நேரிடும்.

ஆல்கஹால் அருந்தும் ஆண்களுக்கு விறைப்புத்தன்மை மற்றும் விந்தணுவை வெளியேற்றுதல் போன்றவற்றில் சிரமம் ஏற்படுகிறது. இதனால் ஆண்கள், பெண்கள் இருவருமே மது அருந்துவதை முடிந்தவரை குறைத்துக்கொள்ளலாம் அல்லது நிறுத்திவிடலாம் என நிபுணர்களால் அறிவுறுத்தப்படுகின்றனர்.