சிறப்புக் களம்

அடேங்கப்பா?! யுடியூப் மூலம் 155 கோடி சம்பாதிக்கும் ஏழுவயது சிறுவன்

webteam

யுடியூப்பில் சேனல் ஆரம்பித்து ஏழு வயது சிறுவன் ஒருவன் 155 கோடி ரூபாய்க்கு மேல் சம்பாத்தித்து உலகையே வியக்க வைத்துள்ளான்.

இன்றைய உலகில் சமூக வலைத்தளங்கள்தான் வசதியான ஊடகம். செய்திகளில் வரும் விஷயங்களை தாண்டி தனித்துவமான பல விஷயங்களை பார்வையாளர்களுக்கு இது வழங்குவதால் அதற்கான ரசிகர்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறார்கள். ‘வி ப்ளாக்ஸ்’ மூலம் பல நிகழ்ச்சிகளை இளம் தலைமுறை தங்களின் சுதந்திரத்திற்கு ஏற்ப தயாரித்து வழங்கி வருகிறார்கள். அந்த வகையில் காமெடிக்கு என்று சில ‘வி ப்ளாக்ஸ்’, சமையலுக்கு என்று சில ‘வி பளாக்ஸ்’ என்று எக்கச்சக்கமான வீடியோ ப்ளாக்ஸ்கள் புதுசு புதுசாக ஆரம்பிக்கப்பட்டு அவை லட்சக்கணக்கான ஆட்களையும் ஈர்த்து வருகிறது. 

சுருக்கமாக சொல்லப்போனால் இன்றைய தலைமுறைக்கு கிடைத்த மாபெரும் சாதனம் யுடியூப். அதன் மீது அவ்வளவு ஆர்வம் அதிகரிக்கும் அளவுக்கு அந்தத் தளம் கட்டற்ற சுதந்திரத்தை வழங்கியுள்ளது.

அப்படிதான் இந்த யுடியூப் வலைத்தளம் மூலம் உகல மக்களையே வசீகரித்து வருகிறான் ரையான் என்ற சிறுவன். இன்றைய யுடியூப் உலகின் சூப்பர்ஸ்டாரும் இவந்தான். அது சரி, யார் இந்த ரையான்? 

ஏழு வயதைக் கூட சரியாக தாண்டாத இந்த ரையான் ஒரு அமெரிக்கச் சிறுவன். இவனது சாதனைதான் இன்றைய சமூக வலைத்தளத்தில் வைரல் கண்டெண்ட். இவனும் இவனது தந்தையும் சேர்ந்து ஆரம்பித்த யுடியூப் சேனல் இன்றைக்கு 22 மில்லியன் டாலர்களை மிகச் சர்வ சாதாரணமாக சம்பாதித்து வருகிறது. 22 மில்லியன் டாலர் என்றால் எவ்வளவு தெரியுமா? இந்திய மதிப்பில் ஏறக்குறையை 155 கோடிக்கு மேல். சரியாக கணக்குப் போட்டால் 1,55,11,21,000.00 ரூபாய் வருகிறது. அந்தளவுக்கு வருமானத்தை குவிக்கும் அளவுக்கு இந்தப் பொடியன் என்னதான் சேனலில் செய்கிறான்? அதான் யுனிக். அவனது அறிவுக்கும் தேவைக்கும் ஏற்ற மாதிரி ஒரு ஐடியாவை அப்பாவுடன் இணைந்து கண்டறிந்திருக்கிறான்.

சிறுவனான ரையான், குழந்தைகளை ஈர்க்கும் வகையில் அவர்கள் விரும்பும் விளையாட்டு பொம்மைகளை பற்றிய புதுப்புது தகவல்களை செய்முறையோடு செய்து காட்ட ஆரம்பித்தான். தங்களின் பிள்ளைக்கு ஏதாவது ஒரு விளையாட்டு பொருள் (டாய்ஸ்) வாங்க வேண்டும் என்றால் உடனே ரையானின் சேனலை தேடிப்பிடித்து பார்க்க ஆரம்பித்தனர் பார்வையாளர்கள். அவரது விமர்சனம் அவர்களுக்குப் பிடித்து போய்விட்டது. கூடவே அவன் தரும் டிப்ஸும் பிடித்து போனது. அதை மீறி அவன் வழங்கும் செயல்முறை விளக்கம் அதிகம் பிடித்து போனது. அப்புறம் என்ன எல்லா பெற்றோர்களும் வேடந்தாங்கள் பறவைகளை போல வந்து இவனது சேனலை வட்டமிட ஆரம்பித்துவிட்டனர். அந்த வருகைதான் அவனை அமெரிக்க அம்பானியாக்கி இருக்கிறது.

இவனது சேனல் கடந்த 2007ஜூன் முதல் 2018வரை பெரிய வருமானத்தை பார்க்க ஆரம்பித்திருக்கிறது. இவன் முதன்முதலில் அப்பாவுடன் இணைந்து 2015ல் தான் சானலை தொடங்கியிருக்கிறான். இதுவரை அவனது சேனலுக்கு 17 மில்லியன் சந்தாதாரகள். அதாவது 17,319,610 ஃபாலோவர்கள் இருக்கிறார்கள். 26 பில்லியன் பேர் இவனது வீடியோவை பார்த்திருக்கிறார்கள்.  

சிறுவன் ரையானுக்கு இரண்டு தங்கைகள் உள்ளனர். அவர்கள் இருவரும் இரட்டையர்கள். இவன் செய்யும் வீடியோவில் அவனுடன் தங்கைகளும் இடம் பெருவதால் அவர் சேட்டைகளுக்கு அளவே இல்லை. வைத்த கண் வாங்காமல் அப்படியே அவர்கள் செய்யும் குறும்புகளை பார்த்து ரசிக்க வைத்து விடுகிறார்கள். அதே போல எத்தனை வகையான விளையாட்டு சாமான்கள் தெரியுமா? இப்படி எல்லாம் கூட பொருட்கள் சந்தையில் இருக்கிறதா என வியக்கும் அளவுக்கு தேடித்தேடி பொருட்களை டொமோ செய்து காட்டுகிறான் ரையான். 

ஆகவே உயர்தரமான கம்பெனிகள் ரையானின் சேனலுக்கு விளம்பரத்தை கொட்டிக் குவிக்கிறார்கள். அதிலும் அநேக வருமானங்கள்.