Cristiano Ronaldo  pt desk
சிறப்புக் களம்

சவுதி புரோ லீக்: 35 கோல்கள் அடித்து கோல்டன் பூட் விருது! யாரும் செய்யாத சாதனை படைத்தார் ரொனால்டோ!

சவுதி அரேபியா புரோ லீக் கால்பந்து தொடரில் அதிக கோல் அடித்த வீரர் என்ற சாதனையை கிறிஸ்டியானோ ரொனால்டோ படைத்துள்ளார்.

Kaleel Rahman

சவுதி அரேபியாவில் புரோ லீக் கால்பந்து தொடரின் 48 வது சீசன் நடைபெற்றது. 18 அணிகள் கலந்து கொண்ட இந்தப் போட்டியில் ஒவ்வொரு அணியும் தலா இருமுறை களம் கண்டன. இந்நிலையில், ரியாத்தில் நடைபெற்ற போட்டியில் அல் நாசர் அணியுடன், அல் இத்திஹாடு அணி பலப்பரீட்சை நடத்தியது.

Cristiano Ronaldo

இந்த போட்டியின் முதல் பாதி ஆட்டத்தின் கூடுதல் நேரத்தில் அல் நாசர் அணியின் நட்சத்திர வீரர் ரொனால்டோ முதல் கோல் அடித்தார். முதல் பாதி ஆட்டத்தில் முன்னிலை பெற்ற அல் நாசர் அணி, இரண்டாவது பாதி ஆட்டத்தின் 69 வது நிமிடத்தில் ரொனால்டோ மீண்டும் ஒரு கோல் அடித்தார்.

இதையடுத்து சவுதி அரேபியா புரோ லீக் கால்பந்து தொடரில் அதிக கோல் அடித்த வீரர் என்ற சாதனையை கிறிஸ்டியானோ ரொனால்டோ படைத்தார். மொத்தம் 31 போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 35 கோல்களை அடித்துள்ளார். கடந்த 2018 - 19 ஆம் ஆண்டு அல் இத்திஹாடு அணியின் வீரர் அப்தர் ரஜாக் ஹம்தல்லா, 34 கோல்கள் அடித்ததே சாதனையாக இருந்தது.

Cristiano Ronaldo

தொடர்ந்து சிறப்பான ஆட்டதை வெளிப்படுத்தி அசத்திய அல் நாசர் அணி 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ஆனாலும், 96 புள்ளிகளுடன் அல் ஹிலால் அணி முதலிடத்தை பிடித்து சாம்பியன் பட்டத்தை வென்றது. 82 புள்ளியுடன் அல் நாசர் அணி இரண்டாவது இடத்தையே பெற்றது. நான்கு நாடுகளில் நடைபெற்ற இந்த தொடரில் அதிக கோல்கள் (35) அடித்து படைத்த முதல் வீரர் என்ற சாதனையை ரொனால்டோ படைத்துள்ளார். அதிக கோல்கள் அடித்ததன் மூலம் கோல்டன் பூட் விருதினை தட்டிச் சென்றுள்ளார் ரொனால்டோ. அத்துடன், நான்கு வெவ்வேறு லீக் போட்டிகளில் Golden Boot விருது பெரும் முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார் ரொனால்டோ.