"20 வருடங்களாக ஓட்டலில் செஃப் ஆக இருந்ததைவிட, மக்களுக்கு நன்மை தரும் கூழ் கடை நடத்துவதில்தான் முழு திருப்தி" என்று சிலாகிக்கிறார், நெல்லை - பேட்டை சாலையோர வியாபாரி ஐயப்பன்.
நெல்லை டவுனில் இருந்து பேட்டைக்கு செல்லும் வழியில் பழமையான ஆலமரத்துக்கு அடியில் பரந்த நிழலில் அமைந்துள்ளது ஒரு கூழ் கடை.
கோடை வெயிலின் வெப்பத்தில் இருந்து தப்பிக்க, உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுக்க இயற்கையின் படைப்பான கம்மங்கூழ் கேழ்வரகு கூழ், குதிரைவாலி கூழ், பஞ்சாப் மசாலா மோர் கிடைக்கிறது.
ரூ.20, ரூ.30 விலையில் கூழ் மற்றும் மோர் கலந்து செம்பில் குடிக்க தரப்படுகிறது. கூழுக்கு துணையாக சீனியரைக்காய் வத்தல், மோர்வத்தல், சுண்டவத்தல், ஆவக்காய் ஊறுகாய், மாங்காய் ஊறுகாய், அப்பளப்பூ இலவசமாக கொடுக்கப்படுகிறது.
"கோடை வெயிலுக்கு, மண் சார்ந்த இந்த உணவு நிச்சயம் உடல் குளிர்ச்சிக்கு மட்டுமின்றி உடல் வலிமைக்கும் பக்கபலமாய் உதவுகிறது" என்கின்றனர் வாடிக்கையாளர்கள்.
ஒன்பது ஆண்டுகளாக கூழ் கடை நடத்தி வரும் ஐயப்பன் கூறும்போது, "பிரபல ஹோட்டலில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக செஃப் ஆக வேலை பார்ப்பதைவிட மண் சார்ந்த படைப்பான கம்பு, கேழ்வரகு, குதிரைவாலி என சத்தான இந்த பொருள்களை மக்களுக்கு கொடுப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சி மிக உயர்வானது. நல்ல வருமானமும் கிடைக்கிறது. விடுமுறைக் காலங்களில் குழந்தைகள் இங்கே குவிந்துவிடுவார்கள். அவர்களுக்கு சத்தான உணவை வழங்குவதில் மகிழ்ச்சி.
<iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=476&href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fpttvonline%2Fvideos%2F934411284061533%2F&show_text=false&width=267" width="267" height="476" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe>
கொரோனா காலத்தில் வீட்டில் யாரும் இஞ்சி சேர்க்க மாட்டார்கள். அதனால் இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் அதிகம் சேர்த்து மசாலா மோர் என்று கொடுக்கிறேன். மக்கள் அதிகம் இதை விரும்புகிறார்கள். அதுபோல குதிரைவாலி மக்கள் விரும்பும் கூழ், முதலிலேயே விற்பனை முடிந்து விடுகிறது. அந்தளவிற்கு மக்களிடம் வரவேற்பை பெற்றிருக்கிறது" என்றார் மகிழ்ச்சியுடன்.
- நாகராஜன்