சிறப்புக் களம்

வாசிப்பு இருந்தால் நேசிப்பு வரும்

வாசிப்பு இருந்தால் நேசிப்பு வரும்

webteam

புத்தகங்களை வாசிக்கும் பழக்கம் இருந்தால் சக மனிதர்களை நேசிக்கும் பழக்கம் வரும் என்பார்கள். ஏப்ரல் முதல் வாரம் உலக நூலக வாரம். இது பற்றிய ஒரு செய்தித் தொகுப்பை இப்போது பார்க்கலாம்.

சிந்தனையின் தூண்டுகோல் புத்தகம். வாசிக்கும் பழக்கம் அருகி வரும் இக்காலத்தில், இப்பழக்கம் உடைய சிலருக்கு துணையாக இருப்பது நூலகங்கள். பரந்து பட்ட அறிவைப் பெற பல்துறை புத்தகங்களையும் வாசிப்பது அவசியம் என்பது கற்றறிந்த பெரியவர்களின் கருத்து. வாசிக்கும் பழக்கத்தை குழந்தைப் பருவத்திலேயே வளர்த்தெடுப்பது பெற்றோரின் கடமை என்கிறார்கள் படைப்பாளர்கள்.

பாடப் புத்தகங்கள் மட்டுமே பயன்தராது, பரந்து விரிந்த உலகில், பல விதமான நூல்களையும் வாசிக்க, மாணவர்கள் பழக வேண்டும் என்பது ஆசிரியர்களின் அறிவுரை. வருங்காலச் சந்ததிக‌ள் பல சங்கதிகளை தெரிந்துகொள்ள வேண்டுமானால், நூலகங்கள் நிலைத்திரு‌த்தல் அவசியம். நேரம் கிடைக்கும்போது வாசிக்கிறேன் என்பதை விட, நேரம் ஒதுக்கி வாசிப்பதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும் என்பதே வாசிப்பதை நேசிப்பவர்களின் கருத்து.