வனவிலங்குகளில் மிக பெரிய மூளை உடைய விலங்காக கூறப்படும் போலார் கரடிகள் சுகாதார பிரச்சினைகளால் பெரிதும் பாதிக்கப்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
இத்தாலி மிலானோ பிக்கோகா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தலைமையில் ஆர்க்டிக் பகுதியில் உள்ள வனவிலங்குகள் பற்றிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதன்படி, கரிம மாசுபாடுகள் மற்றும் சுகாதார பிரச்சினைகளால் போலார் கரடிகளுக்கு ஹார்மோன் பிரச்னை மற்றும் மூளை சம்பந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படுவதாக ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.
ஆர்டிக் பகுதியில் காணப்படும் சுகாதார நச்சுப் காரணமாக போலார் கரடிகள் மற்றும் அவற்றின் குட்டிகள் அதிகளவில் பாதிக்கப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் ஆண் கரடிகள் அதிகப்படியான ஆண்ட்ரோஜன் வெளியீட்டால் கட்டி மற்றும் ஹார்மோன் பிரச்னைகளை சந்திக்கிறது எனவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.