சிறப்புக் களம்

காதலை இசையால் உணர்த்தும் "லா லா லேண்ட்"..!

காதலை இசையால் உணர்த்தும் "லா லா லேண்ட்"..!

webteam

“லா லா லேண்ட்” எனும் படம் இதுவரை வந்த ‘ரொமான்டிக் மியூஸிக்கல்’ வகைப் படங்களிலிருந்து தனித்து நிற்கிறது. காதலை வார்த்தையால் சைகையால் மட்டுமின்றி இசையாலும் உணர்த்தலாம் என்ற புதிய கோணத்தில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

லா லா லேண்ட்’ என்பது லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தை அமெரிக்கர்கள் செல்லமாக அழைக்கும் பெயர். டேமியன் சேசல் இயக்கத்தில் ரயன் கோஸ்லிங், எம்மா ஸ்டோன் நடிப்பில் வெளியான லா லா லேண்ட் கோல்டன் குளோப் விருது விழாவில் 7 விருதுகளை பெற்று புதிய சாதனை படைத்த படம். தற்போது அந்தப் படம் ஆஸ்கர் விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சிறந்த படம், சிறந்த நடிகர், நடிகை, இயக்குனர், காஸ்டியும் டிசைனர், சிறந்த திரைக்கதை, இசை உள்ளிட்ட 14 பிரிவுகளில் ஆஸ்கார் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது இந்தப் படம். ரொமாண்ட்டிக் படம் என்றால் டூயட் பாடல்கள்தானே நமக்கு நினைவுக்கு வரும். அதுவும் உண்டு இந்தப் படத்தில்.