மோட்டோரோலா நிறுவனம் இந்தியாவில் தனது ஸ்மார்ட்ஃபோனாக மொபைலை அறிமுகப்படுத்தி உள்ளது. இன்று பட்ஜெட் விலைப்பிரிவில் 4ஜி மொபைல் போனாக அறிமுகமாகி உள்ளது. மேலும், இந்த மொபைல் நீர்ப்புகா பாதுகாப்பு அமைப்பைப் பெற்றுள்ளது. பட்ஜெட் விலைப்பிரிவில் விற்பனையாகிக் கொண்டிருக்கும் மற்ற மொபைல் போன்களில் இல்லாத சிறப்பம்சம் இதுவாகும். இதுதவிர இந்த மொபைலின் முக்கியமான டாப் 5 சிறப்பம்சங்கள் இதோ!
1. கலக்கும் டிஸ்ப்ளே சிறப்பம்சங்கள்:
Moto E22s ஆனது 6.5-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி திரையுடன் 500நிட்ஸ் உச்ச பிரகாசம் மற்றும் பாண்டா கிளாஸ் பாதுகாப்புடன் வெளியாகி உள்ளது. HD+ தெளிவுத்திறன் மற்றும் வைட்வைன் L1 சான்றிதழுக்கான ஆதரவைக் கொண்டுள்ளது. பேனல் 90Hz புதுப்பிக்கும் திறனைப் பெற்றுள்ளது. பட்ஜெட் விலைப்பிரிவில் இந்த அம்சம் அரிதாக இடம்பெறும் அம்சமாகவே பார்க்கப்படுகிறது
2. கேமராவிலும் அட்டகாச அம்சங்கள்:
புகைப்படம் எடுப்பதற்கு, PDAF உடன் 16 மெகாபிக்சல் முதன்மை கேமரா மற்றும் ஆழம் உணர்தலுக்கான 2 மெகாபிக்சல் இரண்டாம் நிலை சென்சார் உட்பட இரட்டை பின்புற கேமரா அமைப்பு உள்ளது. செல்ஃபிக்களுக்காக, முன்பக்கத்தில் 8 மெகாபிக்சல் கேமரா வழங்கப்பட்டுள்ளது. கேமரா ஆப்ஸ் போர்ட்ரெய்ட், பனோரமா, நைட் விஷன், டூயல் கேப்சர், லைவ் ஃபில்டர் மற்றும் பல போன்ற படப்பிடிப்பு முறைகளை வழங்குகிறது. FHD வீடியோக்களை 30fps இல் பதிவு செய்யும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
3. இரண்டு நாட்கள் நீடிக்கும் சக்தி வாய்ந்த பேட்டரி! ஆனால்..?
Moto E22s ஆனது 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது, இது இரண்டு நாட்கள் வரை நீடிக்கும் என்று மோட்டோரோலா நிறுவனம் கூறுகிறது. இருப்பினும், மோட்டோரோலா மொபைல் விற்பனை செய்யப்படும் பெட்டியில் 10W சார்ஜரை மட்டுமே அனுப்புகிறது. எனவே பேட்டரி சார்ஜ் ஆகி முடிவதற்கு சிறிது நேரம் கூடுதலாக எடுக்கும்.
4. மீடியாடெக் ஹீலியோ செயலி - ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம்:
Moto E22s ஆனது ஒரு நுழைவு-நிலை மீடியாடெக் ஹீலியோ G37 ஆக்டா-கோர் செயலி மூலம் இயக்கப்படுகிறது. இது 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி சேமிப்பகத்தால் ஆதரிக்கப்படுகிறது. ஆண்ட்ராய்டு 12 இல் இயங்கும் இந்த மொபைலை மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்டைப் பயன்படுத்தி உள் சேமிப்பகத்தை 1TB வரை விரிவாக்கும் வசதியை நிறுவனம் வழங்கியுள்ளது.
5. விலை இவ்வளவுதானாம்!
Moto E22s 4ஜிபி ரேம் + 64ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.8,999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது ஈகோ பிளாக் மற்றும் ஆர்க்டிக் ப்ளூ என இரண்டு வண்ணங்களில் விற்பனை செய்யப்பட உள்ளது. அக்டோபர் 22 அன்று Flipkart மற்றும் பிற சில்லறை விற்பனை கடைகள் வழியாக இந்த மொபைல் விற்பனைக்கு வர உள்ளது.
அவ்வளவு தானா? வேறு ஸ்பெஷல் வசதிகள் ஏதும் இல்லையா என்று கேட்பவர்களுக்காக சில போனஸ் அம்சங்கள் கீழே!
போனஸ் அம்சங்கள்:
Moto E22s ஆனது IP52 நீர்-விரட்டும் மதிப்பீட்டைக் கொண்டுள்ளது. அதாவது இந்த மொபைல் லேசான மழை மற்றும் நீர் தெறிப்புகளைத் தாங்கும்.
முன்பக்கத்தில் சந்தையில் உள்ள பெரும்பாலான போன்களைப் போலவே பஞ்ச்-ஹோல் டிஸ்ப்ளே வடிவமைப்பு உள்ளது.
பயோமெட்ரிக் அங்கீகாரத்திற்காக பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் உள்ளது.