சிறப்புக் களம்

மரடோனா, மெஸ்ஸி, மம்தா... மேற்கு வங்க தேர்தல் களமும் கால்பந்தும்!

மரடோனா, மெஸ்ஸி, மம்தா... மேற்கு வங்க தேர்தல் களமும் கால்பந்தும்!

PT WEB

மேற்கு வங்க மக்கள் மத்தியில் வாட்ஸ்அப் ஃபார்வேடு ஒன்று வைரலாகப் பரவி வருகிறது. 'மரடோனா, மெஸ்ஸி, மம்தா'... இதுதான் அது. மம்தா பானர்ஜியின் இடது காலில் பலத்த காயம் ஏற்பட்டதையடுத்து, 'Khela Hobe' (கேம் ஆன்) என்ற முழக்கத்தை முன்வைக்கத் தொடங்கியுள்ளனர் மேற்கு வங்கத்தினர். அரசியல் - ஃபுட்பால் இரண்டையும் விரும்பும் அவர்களுக்கு, இதைத் தாண்டிய பொருத்தமான சொல் வேறு இருக்க முடியுமா என்ன?

``நட்சத்திர ஆட்டக்காரர்களின் இடது கால்கள்தான் எப்போதும் பதம் பார்க்கப்படுகிறது என்பதற்கு வரலாறு சாட்சி” - இப்படியாக செல்கிறது அந்த வாட்ஸ்அப் ஃபார்வேடு. உதாரணமாக மரடோனா, மெஸ்ஸி, பிஷி' (மம்தா 'மேற்கு வங்கத்தின் பிஷி' என்று அழைக்கப்படுகிறார்).

இது உண்மையில் பாஜகவை எதிர்த்து, திரிணாமுல் காங்கிரஸை ஆதரிப்பவர்களுக்கு உத்வேகம் அளிக்கக்கூடிய மெசேஜ். அவர்கள் மம்தாவை ஃபுட்பால் ஆட்டக்காரர்களுடன் ஒப்பிடுகிறார்கள். சில தினங்களாக மேற்கு வங்க மாநில முதல்வரும், திரிணாமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தேர்தல் பரப்புரையின்போது அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் கீழே தள்ளிவிடப்பட்டதாகக் கூறி காயம்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தற்போது அவர் டிஸ்ஜார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.\

அட்டாக் மம்தா...

நடிகையும், திரிணாமுல் நாடாளுமன்ற உறுப்பினருமான நுஷ்ரத் ஜஹானின் நெருங்கிய நண்பரான யஷ் தாஸ்குப்தா கடந்த மாதம் பாஜகவில் இணைந்தார். 'எஸ்.ஓ.எஸ் கொல்கத்தா' படத்தில் நுஸ்ரத்தும் யஷும் இணைந்து பணியாற்றினர்.

முன்னதாக, பாஜக எம்.பி. சௌமித்ரா கான் தனது மனைவி சுஜாதா மொண்டல் திரிணாமுல் காங்கிரசில் சேர்ந்தவிட்டார் என்பதால் அவரை விவாகரத்து செய்வதாக கூறி, அதற்கான ஆவணங்களை அவருக்கு அனுப்பினார். இதையடுத்து, அரம்பாக் சட்டப்பேரவைத் தொகுதியில் மொண்டலை களமிறக்கியுள்ளது திரிணாமூல் காங்கிரஸ்.

மம்தா பானர்ஜியின் முன்னாள் அமைச்சரவை சகா சோவன் சாட்டர்ஜி கடந்த ஆண்டு பாஜகவில் சேர்ந்தார். ஆனால், அவரது மனைவி ரத்னா சாட்டர்ஜிக்கும் ஆளும் கட்சியிலிருந்து சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட சீட்டு வழங்கப்பட்டுள்ளது. இப்படியாக குடும்பத்தில் பலரும் வெவ்வேறு அரசியல் கட்சிகளின் மீது ஈர்ப்பும் கொண்டு, பிரிந்து கிடக்கின்றன.

ஆக, மேற்கு வங்கத்தில் குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒரே கட்சியைச் சேர்ந்தவர்கள் என்று கூற முடியாது. அதனை கணக்கில் வைத்து முக்கியமானவர்களுக்கு சீட் கொடுத்து தனது ஆட்டத்தை ஆடி வருகிறார்.