சிறப்புக் களம்

5 முனைப் போட்டி நிலவிய மணிப்பூர் - கட்சிகள் செய்த ஸ்கோர் என்ன? - ஓர் அலசல்

5 முனைப் போட்டி நிலவிய மணிப்பூர் - கட்சிகள் செய்த ஸ்கோர் என்ன? - ஓர் அலசல்

Veeramani

பாஜக, காங்கிரஸ், தேசிய மக்கள் கட்சி, நாகா மக்கள் முன்னணி, ஐக்கிய ஜனதா தளம் என 5 முனை போட்டி நிலவிய மணிப்பூரில் கட்சிகள் பெற்ற வாக்குசதவீதம் என்ன?... விரிவான பார்வை...

மணிப்பூர் மாநிலத்திலும் பாரதிய ஜனதா ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது. மொத்தம் உள்ள 60 தொகுதிகளில் பாரதிய ஜனதா 32 தொகுதிகளில் வெற்றி பெற்று அறுதி பெரும்பான்மை பெற்றுள்ளது.



கடந்த 2017 தேர்தலில் 28 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த காங்கிரஸ், இம்முறை 5 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. தேசிய மக்கள் கட்சி 7 இடங்களையும், ஐக்கிய ஜனதா தளம் 6 இடங்களிலும், நாகா மக்கள் முன்னணி 5 இடங்களையும் கைப்பற்றியுள்ளன. குக்கி மக்கள் கூட்டணி 2 இடங்களிலும், சுயேச்சைகள் 3 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

இந்த தேர்தலில் பாஜக 37.83 சதவீதம், காங்கிரஸ் 16.73 சதவீதம், தேசிய மக்கள் கட்சி 17.29 சதவீதம், ஐக்கிய ஜனதா தளம் 10.77 சதவீதம், நாகா மக்கள் முன்னணி 8.09 சதவீதம் வாக்குகளை பெற்றுள்ளது. மேலும், நோட்டா 0.56 சதவீதம் வாக்குகளையும், தேசியவாத காங்கிரஸ் 0.67 சதவீத வாக்குகளையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 0.06 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளது.



இந்த தேர்தலில் பாஜக, தேசிய மக்கள் கட்சி,நாகா மக்கள் முன்னணி, ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் தனித்து களம் கண்டன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் கூட்டணி அமைத்து காங்கிரஸ் தேர்தலை சந்தித்தது. குக்கி மக்கள் கூட்டணி, தேசியவாத காங்கிரஸ்,சிவசேனா, ராமதாஸ் அத்வாலே கட்சிகள் சில தொகுதிகளில் போட்டியிட்டன.