நிறைய பேருக்கு பாதங்கள் வியர்ப்பதுடன், எப்போதும் ஜில்லென்றோ, உறைந்து போவதுபோன்றோ இருக்கும். அவர்கள் சாக்ஸ் அணிந்தாலும், கதகதப்பான ஆடைகளை அணிந்தாலும்கூட காலின் குளிர்ந்த தன்மை மாறாது. குளிர்ந்த பாதங்கள் அதீத அசௌகர்யம் தரக்கூடியது. குறிப்பாக குளிர்காலங்களில் இவர்களின் நிலைமை இன்னும் மோசம் என்றே சொல்லலாம். குளிர்ந்த பாதங்கள் மோசமான ரத்த ஓட்டம் மற்றும் தீவிர உடல்நல பிரச்னையின் அறிகுறியாக இருக்கலாம் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.
குளிர்ந்த பாதங்கள் உடலை எப்படி பாதிக்கிறது?
- தன்னுடல் எதிர்ப்புசக்தி பிரச்னைகள்
- நீரிழிவு நோயால் ஏற்படும் புற நரம்பியல் பிரச்னையானது பாதங்களிலுள்ள நரம்புகளை சேதமடைய வைத்து அவற்றை குளிரவைக்கிறது.
- அனீமியா
- ரத்த ஓட்ட பிரச்னைகள்
- இதய நோய்கள்
- தமனி அடைப்புகள்
- புற ரத்தநாளங்களில் ஏற்படும் பிரச்னைகள் கால்கள் மற்றும் பாதங்களுக்கு செல்லும் ரத்த ஓட்டத்தை மெதுவாக்குகிறது அல்லது தடுக்கிறது. இது அதீத புகைப்பழக்கம், உயர் ரத்த அழுத்தம், அதிக கொழுப்பு மற்றும் வயது சார்ந்த பிரச்னைகளால் ஏற்படுகிறது.
- ரேனாடின் சிண்ட்ரோம் என்ற பிரச்னையானது கை, கால் விரல்களிலுள்ள சிறு ரத்தநாளங்களை பாதிக்கிறது. இதனால் ரத்த ஓட்டம் குறைவதால், சரும நிறம் மாறுதல், சருமம் குளிர்தல் மற்றும் ஊசியால் குத்துவது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது.
- ஹைபோதைராய்டிஸம் போன்ற ஹார்மோன் சமநிலையின்மை பிரச்னையால் தைராய்டானது போதுமான ஹார்மோன்களை உற்பத்தி செய்யாது. இதனால் எப்போதும் குளிர்வதுபோன்ற உணர்வே ஏற்படும்.
- நரம்பு சார்ந்த பிரச்னைகள்
- உடலின் மற்ற பாகங்களைவிட பாதங்களில் வெப்பநிலை குறைவாக இருக்கும்.
- அடிக்கடி பாதங்கள் மற்றும் விரல்களில் துடிப்பதுபோன்ற வலி ஏற்படும்.
- பாதங்கள் சூடாக அதிக நேரமாகும்.
- கைகள், பாதங்களில் வலி மற்றும் பலவீனமான உணர்வு இருக்கும்.
- மரத்துப்போதல்
- பாதங்கள் பெரும்பாலும் வெளிறி, சிவந்து அல்லது நீல நிறத்தில் இருத்தல்
- ஒருநாளில் இரவு அல்லது குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் குளிர் உணர்வு ஏற்படும்.
குளிர்காலம் தவிர பாதங்கள் குளிர்ந்துபோக பல்வேறு காரணிகள் இருக்கின்றன.
கால்கள் மற்றும் பாதங்களில் ரத்த ஓட்டம் சரிவர இல்லாவிட்டால் பாதங்கள் குளிர்ந்துபோகும். ஏனெனில் கால்களுக்கு ரத்தம் செல்ல சற்று நேரம் எடுக்கும்.
மருந்துகளின் பக்கவிளைவுகள்
தொடர்ந்து மருந்து மாத்திரை எடுப்பவர்களுக்கு பக்கவிளைவாக ரத்த ஓட்ட சமச்சீரின்மை ஏற்படும். கீழ்க்கண்ட சில மருந்துகள் பாத குளிர்ச்சியை ஏற்படுத்தும்.
- உயர் ரத்த அழுத்தத்திற்கு எடுக்கப்படும் Beta-blockers
- தலைவலி மற்றும் மைக்ரேனுக்கு எடுக்கப்படும் Ergotamine
- சளி மற்றும் இருமலுக்கு எடுக்கப்படும் Pseudoephedrine
பாத குளிர்ச்சியிலிருந்து விடுபடுவது எப்படி?
பாதம் குளிர்வதிலிருந்து விடுபட சில சுலபமான வழிகளை பரிந்துரைக்கின்றனர் நிபுணர்கள். முதலில் பாதம் குளிர்வதற்கான காரணத்தை கண்டறியவேண்டும். பின்னர் அதற்கு முறையான சிகிச்சை எடுக்கவேண்டும். பாதங்களை உறையவைக்கும் மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டாம் என்கின்றனர்.
- கதகதப்பான சாக்ஸ் அணியுங்கள்
- தினசரி 30-45 நிமிடங்கள் உடற்பயிற்சி அவசியம்
- சுருக்க காலுறைகளை அணியவும்
- ஆரோக்கியமான உணவுமுறை
- ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் வகையில் கால்களை உயர்த்தி வைக்கவும்
- அதிக தண்ணீர் அருந்தவும்