சிறப்புக் களம்

வெளிநாட்டு எண்ணில் இருந்து அழைப்பா ? எச்சரிக்கிறது கேரள போலீஸ்

வெளிநாட்டு எண்ணில் இருந்து அழைப்பா ? எச்சரிக்கிறது கேரள போலீஸ்

webteam

+4 அல்லது +5 எனத் தொடங்கும் முன்பின் அறியாத வெளிநாட்டு எண்களில் இருந்து வரும் அழைப்புகளை எடுக்க வேண்டாம் எனவும், மிஸ்டுகால் வந்தால் திரும்ப அழைக்க வேண்டாம் எனவும் கேரள காவல்துறை எச்சரித்துள்ளது.

கேரளாவில் ஏராளமான மக்கள் தங்கள் செல்போன்களுக்கு +4 மற்றும் +5 ஆகிய எண்களில் தொடங்கும் வெளிநாட்டு எண்களில் இருந்து அழைப்புகள் வருவதாகவும், அவற்றை எடுக்கும் போது செல்போனில் உள்ள தகவல், பேலன்ஸ் ஆகியவை களவு போவதாகவும் காவல்துறையில் புகாரளித்தனர். இந்த எண்கள் பொலீவியா போன்ற நாடுகளைச் சேர்ந்தவை. உதாரணமாக பொலீவியாவின் ஐ.எஸ்.டி.கோடு +591.

இந்தப் புகார்களை அடுத்து, உயர் தொழில்நுட்பங்களைக் கொண்டு செல்போன் கால்கள் மூலம் திருட்டுகளில் ஈடுபட முடியுமா? – என்பது குறித்தும், ஏன் வெளிநாட்டு எண்களில் இருந்து கேரள மக்களுக்குக் கால்கள் வருகின்றன? – என்பது குறித்தும் விசாரணை செய்து வருகின்றன.

இந்த விசாரணைகள் முடிந்து, காரணங்கள் கண்டறியப்படும் வரையில் இதுபோன்ற கால்களை எடுக்க வேண்டாம் எனக் கேரள காவல்துறை மக்களுக்கு எச்சரிக்கை விடுத்து உள்ளது. இன்றைக்கு கேரளாவுக்கு நடப்பது நாளை தமிழகத்துக்கும் நடக்கலாம் என்ற நிலையில் இது கவனத்துக்கு உரியதாகின்றது.

நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ்