சிறப்புக் களம்

நாளை முடிகிறது ஜியோ பிரைம் சலுகை

நாளை முடிகிறது ஜியோ பிரைம் சலுகை

Rasus

ரிலையன்ஸ் ஜியோவின் இலவச சேவைகள் நாளையுடன் முடிவடைகிறது.

2016-ம் ஆண்டு தொலைதொடர்பு சந்தையில் அறிமுகமான ரிலையன்ஸ் ஜியோ இலவச சேவைகளைத் தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கியது. இதனால் விரைவில் 10 கோடி வாடிக்கையாளர்களை மிக குறைந்த காலத்தில் எட்டியது. இந்நிலையில் ரிலையன்ஸ் ஜியோவின் இலவச சேவைகள் மார்ச் 31-ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. இதனால், அந்நிறுவனம் குறைந்த விலையில் வாடிக்கையாளர்கள் சேவையை பெற, ஜியோ பிரைம் திட்டத்தை அறிவித்தது.

தற்பொழுது ஜியோ 4ஜி சிம் சேவையைப் பயன்படுத்தும் அனைத்து வாடிக்கையாளர்களும், மார்ச் 31-ம் தேதிக்குள் ஜியோ சிம் வாங்குபவர்களும் ஜியோ பிரைம் உறுப்பினர் ஆகலாம். மார்ச் 31-ம் தேதிக்குள் மை ஜியோ ஆப், ஜியோ இணையதளம், ஜியோ ரீசார்ஜ் முலமாக ரூபாய் 99 செலுத்தி ஒரு வருடத்துக்கு ஜியோ பிரைம் உறுப்பினர் ஆகலாம்.

ஜியோ பிரைம் உறுப்பினர் ஆன பிறகு, மாதாந்திர சேவைகளுக்காகப் பல்வேறு திட்டங்களை ஜியோ அறிவித்துள்ளது. இந்த திட்டங்கள் ரூ.19-ல் தொடங்கி ரூ.9999 வரை உள்ளன.

303 சலுகை

ஜியோ பிரைம் உறுப்பினர் மாதம் ரூ. 303 செலுத்தி இப்பொழுது இலவசமாக பெறும் அதே சேவையை பெறலாம். அதாவது, ரூ.303 செலுத்தினால் தினமும் 1 ஜிபி டேட்டா 4-ஜி வேகத்தில் கிடைக்கும். அதன் பிறகு, இணைய வேகம் குறையும். தொலைபேசி அழைப்புகளும், குறுஞ்செய்திகளும் இலவசம்.

போஸ்ட் பெய்ட் பயனர்கள்:

போஸ்ட் பெய்ட் ஜியோ சிம் வைத்திருப்பவர்களும் ஜியோ பிரைம் உறுப்பினராக வேண்டும். ஆனால் போஸ்ட் பெய்ட் உறுப்பினர்களுக்கு ரூ.303, ரூ.409 மற்றும் ரூ. 999 என மூன்று மாதாந்திர சலுகைகள் மட்டுமே உள்ளது.

ஜியோ பிரைம் உறுப்பினர் ஆகாவிட்டால்...

ஜியோ பிரைம் உறுப்பினர் ஆகாத வாடிக்கையாளர்களுக்கும் சேவை கட்டணங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால் ஜியோ பிரைம் உறுப்பினர்களை விட, அதிக பணம் கட்ட வேண்டியதாக இருக்கும்.