சிறப்புக் களம்

செக்ஸ் ஆர்வத்தை குறைக்கிறதா புகை மற்றும் காற்று மாசு? - அதிர்ச்சியளிக்கும் நிபுணர்கள்

செக்ஸ் ஆர்வத்தை குறைக்கிறதா புகை மற்றும் காற்று மாசு? - அதிர்ச்சியளிக்கும் நிபுணர்கள்

Sinekadhara

அதிக புகை மற்றும் புகைமூட்டம் நிறைந்த பகுதிகளுக்கு செல்லும்போது கண்கள், மூக்கு மற்றும் தொண்டை போன்ற உறுப்புகள் கடுமையாக பாதிக்கப்படும் என்பது நம் அனைவரும் நன்கு அறிந்ததே. ஆனால் அந்தரங்க பாகங்கள்கூட புகையால் பாதிக்கப்படும் என்றால் ஏற்றுக்கொள்ள முடிகிறதா? ஆம். அதுதான் உண்மை என்கின்றனர் நிபுணர்கள். அதிகப்படியான புகை மற்றும் மாசானது பாலியல் ஆரோக்கியத்தை பாதித்து, கருவுறுதலில் பிரச்னையை ஏற்படுத்துகிறது. பாலியல் வாழ்க்கையை பல்வேறு வழிகளில் புகைமூட்டம் பாதிக்கிறது என்கின்றனர் மருத்துவர்கள்.

1. பெண்களின் லிபிடோ சுரப்பை குறைக்கிறது
2. ஆண்களின் விறைப்புத்தன்மையை இழக்க செய்கிறது
3. டெஸ்டோஸ்டிரோன் மற்றும் ஈஸ்டிரோஜென் ஹார்மோன் சுரப்பை குறைக்கிறது
4. மாசானது கருவை பாதிக்கிறது

பாலியல் ஆரோக்கியத்தை புகை எப்படி பாதிக்கிறது?

கார் நச்சுப்புகையால் விறைப்புத்தன்மை குறைபாடு அதிகரித்து வருவதாக 2019ஆம் ஆண்டு Journal of Sexual Medicine-இல் வெளியான ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன. கார் வெளியிடும் நச்சுத் துகள்களை சுவாசிப்பது ரத்த நாளங்களின் வீக்கத்தைத் தூண்டுவதோடு, பிறப்புறுப்புகளுக்கு ஆக்ஸிஜன் செல்வதையும் தடுக்கிறது. இது ஆண்களின் பாலியல் தூண்டுதலின் திறனை பாதிக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள்.

மாசுபட்ட காற்றின் துகள்களில் பாதரசம், ஈயம் காட்மியம் மற்றும் பாலிசைக்ளிக் நறுமண ஹைட்ரோகார்பன்கள் உள்ளன. அவை ஹார்மோன் சமநிலையை மோசமாக பாதிக்கும். இதனால் விந்தணு எண்ணிக்கை மற்றும் இயக்கம் கணிசமாக குறைகிறது. இதனுடன், வாகன புகையிலிருந்து வெளியாகும் நைட்ரஸ் ஆக்சைடு, விறைப்புத்தன்மையை ஏற்படுத்தும் திசுக்கள்மீது தாக்கத்தை ஏற்படுத்துவதால் வெகுவாக பாதிக்கப்படுகிறது. ஆண்களுக்கு மட்டுமல்ல; பெண்களின் பாலியல் உணர்வையும் மோசமாக பாதிக்கும்.

மொத்தத்தில், காற்று மாசு மற்றும் புகையானது தனிப்பட்ட நபரின் பாலியல் செயல்பாட்டை குறைக்கும் என்பதில் சந்தேகமில்லை என்கின்றனர் நிபுணர்கள். ஆனால் இது ஆண்களில் விறைப்புத்தன்மையை பாதிப்பதுடன் முடிவடைகிறதில்லை என்கின்றனர். புகைமூட்டம் பாலியல் ஆரோக்கியத்தை பாதிக்கும் பிற வழிகளையும் தெரிந்துகொள்ளவும்.

1. மாசு லிபிடோ அளவை குறைக்கிறது - உடல் சோர்வடைவதால் நிறைய நேரங்களில் ஒருவருக்கு பாலியல் உணர்வு வராது.

2. மாசுபாட்டால் அழுத்தம் ஏற்படுவதால் ஒருவருக்கு தனது இணையுடன் பாலியல் உறவு வைத்துக்கொள்ளும் எண்ணம் குறைகிறது.

3. கண்கள் மற்றும் தொண்டையில் புகையால் இருமல் மற்றும் ஒருவித இறுக்கம் ஏற்படுவதால் உடலில் அசௌகர்யம் ஏற்பட்டு லிபிடோ சுரப்பு தடைபடுகிறது.

நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ காற்று மாசு மற்றும் புகையானது மெட்ரோ நகரங்களி வாழும் ஆண், பெண் என இருபாலரின் பாலியல் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

இதற்கு தீர்வு உண்டா?

காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தலாம். இதனால் புகை மண்டலம் ஏற்படுவதை குறைக்கமுடியும். இதுதவிர, புகையிலிருந்து தன்னை தற்காத்துக்கொள்ள சில வழிகளை பின்பற்றலாம்.

1. என்95 மாஸ்க், பில்டர் மாஸ்க்குகளை அணிந்து செல்லலாம்.

2. முடிந்தவரை காரில் பயணிப்பதை தவிர்க்கலாம்

3. சிட்ரஸ் பழங்கள், வைட்டமின் சி நிறைந்த உணவுகளை சாப்பிட்டு நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்

4. காலைநேரத்தில் சைக்கிளிங் செல்வதை தவிர்க்கலாம்

5. காலையில் வாக்கிங் செல்வதை தவிர்க்கலாம்.

இதுபோன்ற சில எளிய வழிகளை பின்பற்றுவதன்மூலம் ஒருவர் புகை மற்றும் காற்று மாசிலிருந்து தன்னை தற்காத்து கொள்வதுடன், பாலியல் உறவு மற்றும் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த முடியும் என்கிறனர் நிபுணர்கள்.