ISO  புதிய தலைமுறை
சிறப்புக் களம்

ISO அமைப்பு தோற்றுவிக்கப்பட்ட நாள் இன்று!

ISO குறித்தும், அது தோற்றுவிக்கப்பட்ட நாடு, அதன் முக்கியத்துவம், புதிதாக ஒரு பொருளுக்கு எப்படி இச்சான்றை பெருவது... என்பதையெல்லாம் பார்ப்போம்.

Jayashree A

நாம் வாங்கும் ஒரு பொருளில் ISO முத்திரை இருந்தால்தான் அப்பொருள் தரம் வாய்ந்ததாக கருதப்படும். அத்தகைய பொருட்களின் தரநிலை சான்றிதழான ISO தொடங்கப்பட்ட நாள் இன்று. இந்நாளில், ISO குறித்தும், அது தோற்றுவிக்கப்பட்ட நாடு என்ன, ISO-வின் முக்கியத்துவம் என்ன, புதிதாக ஒரு பொருளுக்கு எப்படி இச்சான்றை பெறுவது... என்பதையெல்லாம் இங்கு பார்ப்போம்.!

ISO சான்று பெற்றிருந்தால் :

1. உலகத்தில் எந்த ஒரு மூலையில் இருந்தாலும் அங்கு தயராக்கப்படும் பொருளுக்கு தரம் மிக அவசியமாக உள்ளது. அப்படிப்பட்ட தரத்தை இந்த சான்றிதழ் மூலம் நம்மால் உறுதிசெய்யமுடியும். இதன்மூலம் தொழிலின் வளத்தையும் நம்மால் உயர்த்த முடியும்.

2. வியாபார நிறுவனங்கள், இந்த சர்டிபிகேட் இருந்தால்தான் வியாபாரத்தில் கொடிகட்டி பறப்பதோடு, லாபத்தையும் பெற முடியும்.

ISO தோற்றுவிக்கப்பட்ட நாடு:

தரநிலைப்படுத்தலுக்கான சர்வதேச (ISO) அமைப்பானது 1947 பிப்ரவரி 23 இல் தொடங்கப்பட்டு சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.

இந்த அமைப்பு 1920 களில் தேசிய தரப்படுத்தல் சங்கங்களின் சர்வதேச கூட்டமைப்பாக (ISA) தொடங்கியது. இரண்டாம் உலகப் போரின் போது இடைநிறுத்தப்பட்ட பின்னர், ஐக்கிய நாடுகளின் தரநிலை ஒருங்கிணைப்புக் குழு (UNSCC) ஒரு புதிய உலகளாவிய தரநிலை அமைப்பை (ISO) உருவாக்கியது.

இந்த ISO வில் 167 நாடுகளில் செயல்படுகின்றன. ஒரு நாட்டிற்கு ஒரு உறுப்பினர் மட்டுமே இதில் பங்கு கொள்ளமுடியும். இதில் உள்ள உறுப்பினர்கள் தங்கள் நாடுகளில் முதன்மையான தரநிலை அமைப்பினராக உள்ளனர். தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் ISO இன் உறுப்பினர்களாக முடியாது என்றாலும், ISO உடன் தொழில் வல்லுநர்கள் ஒத்துழைக்க பல்வேறு வழிகள் உள்ளன.

ISO உறுப்பினர்கள் ஆண்டுதோறும் ஒரு பொதுச் சபையில் கூடி, அமைப்பின் செயல்பாடுகள் மற்றும் நோக்கங்களைப் பற்றி விவாதிக்கின்றனர். மேலும் 20 உறுப்பினர்களை கொண்ட கவுன்சில் இதில் உள்ளது.

இதன் முக்கிய பங்கு:

பல்வேறு நாடுகளுக்கு இடையே பொதுவான தரநிலைகளை வழங்குவதன் மூலம் உலக வர்த்தகத்தை எளிதாக்குவதில் ISO முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த தரநிலைகள் தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பாதுகாப்பானவை, நம்பகமானவை மற்றும் நல்ல தரம் வாய்ந்தவை என்பதை உறுதிப்படுத்தும் நோக்கம் கொண்டவை.

ஐஎஸ்ஓ சர்வதேச தரநிலைகளை யாருக்கு அவசியமாகிறது?

உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள், வாங்குபவர்கள், வாடிக்கையாளர்கள், வர்த்தக சங்கங்கள், பயனர்கள் அல்லது கட்டுப்பாட்டாளர்கள் போன்ற தனிநபர்கள் மற்றும் தங்கள் தொழில்களுக்கு என்ன தேவை என்பதை அறிந்தவர்கள் ஆகியோருக்கு ஐஎஸ்ஓ சான்று அவசியமாகிறது.

ஐ.எஸ்.ஓ தரச்சான்றிதழ் பெற எவ்வளவு காலம் ஆகும்?

ஐ.எஸ்.ஓ. தரச் சான்றிதழ் பெறுவதற்கு எஸ்.எஸ்.ஐ. யூனிட்களுக்கு அரசாங்கமே நிதியுதவி அளிக்கின்றது. ஐ.எஸ்.ஓ. சான்றிதழ் பெற்ற பின்பு அதன் விவரங்களை அனுப்பினால், நாம் எவ்வளவு செலவு செய்தோமோ அதில் 75 சதவீத்தை அரசு மானியமாக வழங்குகின்றது. ஆகவே, சிறு தொழில் முனைவோர் ஐ.எஸ்.ஓ. 9001 2008 தரச் சான்றிதழ் பெறுவதில் எந்தவித தடையும் இல்லை.

ஐ.எஸ்.ஓ. தரச் சான்றிதழ் பெறுவதற்கு குறைந்த பட்சம் மூன்று மாதங்கள் ஆகும். சிறு மற்றும் குறு தொழில் செய்வோர் ஐ.எஸ்.ஓ. தரச் சான்றிதழை பெறுவதன் மூலம் அரசு வங்களிலும், அரசு அனுமதி பெற்ற வங்கிகளிலும் வியாபாரத்தை பெருக்க கடன் பெறலாம்.