கருவுற்ற ஆரம்பக்கட்டத்திலேயே கருத்தடை மாத்திரைகள் கொடுக்கப்பட்டால் அவை 99.6% பாதுகாப்பானதாகவும், திறம்படவும் செயல்படக்கூடியவை. ஆரம்பகட்ட கருக்கலைப்புக்கு மாத்திரைகள் எடுத்துக்கொள்ளப்பட்டாலும் அவை மருத்துவரின் பரிந்துரைப்படிதான் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.
கருக்கலைப்பு மாத்திரைகள் எவ்வாறு செயல்படுகின்றன?
கருவுற்ற பிறகு அது வளர ப்ரோஜெஸ்ட்ரான் என்ற ஹார்மோன் உதவுகிறது. கரு வேண்டாம் என முடிவெடுத்து கருக்கலைப்பு மாத்திரையை உட்கொள்ளும்போது முதலில் மாத்திரை இந்த ஹார்மோன்களை தடுக்கிறது. பெரும்பாலான பெண்களுக்கு இந்த மாத்திரையை உட்கொண்ட ஒரு மணிநேரத்தில் வயிற்றில் பிடிப்புகள் ஏற்பட்டு ரத்தப்போக்கு ஏற்படும். அதில் ரத்தம் மற்றும் திசுக்கள் கட்டி கட்டிகளாக வெளியேறும். இதனால் சில மணிநேரங்கள் அல்லது சில நாட்களுக்குக்கூட வலி இருக்கலாம்.
வலி தாங்கமுடியாத அளவில் இருக்கும்போது வலிகுறைப்பு மாத்திரைகளுடன் குமட்டல் தடுப்பு மாத்திரைகளையும் எடுத்துக்கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைப்பர். இது ஒருசில நாட்களில் சரியாகிவிடும்.
மருத்துவ கருக்கலைப்பின் பக்க விளைவுகள்
ஒருமுறை கருக்கலைப்பு செய்தபிறகு சில பக்கவிளைவுகளை சந்திக்க நேரிடும்.
மாதவிடாய் சுழற்சியில் தாக்கத்தை ஏற்படுத்துமா கருக்கலைப்பு மாத்திரைகள்?
கருக்கலைப்பு மாத்திரையை எடுத்துக்கொண்டபிறகு சில நாட்கள் மற்றும் சில வாரங்களுக்குக்கூட ரத்தப்போக்கு இருப்பது சகஜம்தான். வயிற்றுப்பகுதியில் தொடர்ந்து வலி இருந்தால் அதற்கான மருந்துகளை எடுத்துக்கொள்ளலாம் அல்லது சுடு தண்ணீர் ஒத்தடம் கொடுக்கலாம். கருக்கலைப்பிறகு மாதவிடாய் சுழற்சி மாற்றியமைக்கப்படும். மாத்திரை எடுத்துக்கொண்ட 4-8 வாரங்களுக்குப் பிறகு மாதவிடாய் சீராகும்.
மாத்திரை எடுத்துக்கொண்ட பிறகு ஏற்படும் சிக்கல் என்னென்ன?
இதுபோன்ற தொடர் அறிகுறிகள் நோய்த்தொற்றுக்கான அறிகுறியாகக்கூட இருக்கலாம். எனவே உடனடியாக மருத்துவரை அணுகவேண்டும். எந்த ஒரு பிரச்னைக்கும் மருந்து மாத்திரைகளை எடுத்துக்கொள்ளும் முன்பு உங்களுடைய உடல்நல குறைபாடுகள் குறித்து மருத்துவரிடம் வெளிப்படையாக எடுத்துக்கூறி அவரது ஆலோசனைப்படியே எடுத்துக்கொள்ள வேண்டும். மருத்துவர் No சொல்லிவிட்டால் No தான்.