சிறப்புக் களம்

மதுரை உருவான கதை...! - மதுரையை நிர்மாணித்த மன்னர்கள்

மதுரை உருவான கதை...! - மதுரையை நிர்மாணித்த மன்னர்கள்

subramani

வைகை நதியோரம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உருவானது தான் தற்போதைய மதுரை. முப்பெரும் வேந்தர்களின் ஒருவராக விளங்கிய பாண்டிய மன்னனின் ஆளுகையில் சிறப்புப் பெற்றது மதுரை. தற்போதுள்ள தமிழக நகரங்களில் மிகவும் மூத்த நகரம் மதுரை. ராமாயணம், அர்த்தசாஸ்திரம் போன்றவற்றால் போற்றப்பட்ட ஊர் மதுரை. ஆதி காலத்தில் தனஞ்செயன் என்ற விவசாயி ஒருவர் வனப்பகுதி வழியே சென்ற போது கடம்பமரத்தின் கீழ் சுயம்புலிங்கம் ஒன்று இருப்பதை பார்த்திருக்கிறார். உடனே அவர் சிவலிங்கத்தை பார்த்த செய்தியை மன்னர் குலசேகரிடம் சென்று தெரிவித்துள்ளார்.

மன்னர் பிறப்பித்த ஆணையின் படி அந்த சுயம்பு லிங்கத்தை சுற்றி உருவாக்கப்பட்ட எழில்மிகு நகரம் தான் மதுரை என்று சொல்லப்படுகிறது. மதுரம் என்றால் இனிமை என்று பொருள் முதலில் மதுராபுரி என பெயர் சூட்டப்பட்டது. சிவன் தன் திருவிளையாடகளை நிகழ்த்திய இடமாக மதுரை சொல்லப்படுகிறது. பிறகு வந்த விஜயநகரப் பேரரசின் அங்கமாக மதுரை விளங்கியது. அவர்களால் நியமிக்கப்பட்ட ஆளுநர்கள் தான் பின்னாளில் நாயக்க மன்னர்களாக மதுரையை ஆண்டனர்.

அதன் பிறகு ஆங்கிலேயர் காலம் வரையிலும் கூட மதுரையை ஆண்ட ஒவ்வொருவரும் கலை அழகுடன் கட்டுமான ரசனையுடன் மதுரையை மெருகேற்றினர். திருமலை நாயக்கர் மஹால், வண்டியூர் தெப்பக்குளம், காந்தி அருங்காட்சியகம், அழகர் கோவில், வைகையின் குறுக்கே கட்டப்பட்டிருக்கும் மேம்பாலம் என நீள்கிறது மதுரையின் அழகைச் சொல்லும் பட்டியல். முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டு மதுரையில் உள்ளது. அவை முறையே திருப்பரங்குன்றம் மற்றும் பழமுதிர்ச்சோலை.

தொன்மையான நகரமாக அறியப்படும் மதுரை குறித்து பேச நிறைய விசயங்கள் உண்டு. தொடர்ந்து அடுத்தடுத்த வீடியோக்களில் பேசுவோம்.