சிறப்புக் களம்

2001 முதல் தற்போது வரை.. வெற்றியும் தோல்வியும்.. ஜி.எஸ்.எல்.வி ராக்கெட் கடந்து வந்த பாதை!

2001 முதல் தற்போது வரை.. வெற்றியும் தோல்வியும்.. ஜி.எஸ்.எல்.வி ராக்கெட் கடந்து வந்த பாதை!

கலிலுல்லா

இந்தியா இதுவரை 14 முறை ஜி.எஸ்.எல்.வி ராக்கெட்டை விண்ணில் செலுத்தியுள்ளது. 2001 முதல் தற்போது வரை ஜிஎஸ் எல் வி ராக்கெட் கடந்து வந்த பாதையை பார்க்கலாம்.

முதன் முதலில் 2001ஆம் ஆண்டு ஜி.எஸ்.எல்.வி - D1 ராக்கெட்டை இந்தியா ஏவியது. ஜிசாட்-1 செயற்கைக்கோளை தாங்கிச் சென்று இந்த ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தியது. அடுத்ததாக 2003 மே மாதம் ஜிஎஸ்எல்வி - D 2 ராக்கெட் ஜி.சாட்-2 செயற்கைக்கோளை தாங்கிச் சென்று வெற்றிகரமாக நிலை நிறுத்தியது.

2004 செப்டம்பர் மாதம் ஜி.எஸ்.எல்.வி F-01 ராக்கெட் ஜி.சாட் 3 செயற்கைக்கோளை தாங்கிச் சென்றது. 2006 ஜூலை மாதம் ஜி.எஸ்.எல்.வி F-02 ராக்கெட் ஏந்திச் சென்ற இன்சாட் 4சி, தொழில்நுட்ப கோளாறு காரணமாக விண்ணில் பாயவில்லை. 2007ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஜிஎஸ்எல்வி - F04 ராக்கெட் இன்சாட் - 4சி.ஆர் செயற்கைக்கோளை ஏந்தி சென்று வெற்றிகரமாக நிலைநிறுத்தியது.

2010 ஏப்ரல் மாதத்தில் ஜி.எஸ்.எல்.வி. D 3 ராக்கெட், ஜி.சாட் 4 செயற்கைக்கோளை விண்ணில் ஏவியது. ஆனால் எதிர்பாராத தொழில்நுட்ப கோளாறு காரணமாக இது தோல்வியில் முடிந்தது. மீண்டும் இதே ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஜி.எஸ்.எல்.வி- F06 ராக்கெட் ஜி.சாட் - 5P என்ற செயற்கைக்கோளை சுமந்து சென்றது. ஆனால் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தோல்வியில் முடிவடைந்தது.

அதன்பின்னர் பல்வேறு மாறுதல்கள் கொண்டு வரப்பட்டு, நான்கு ஆண்டுகாலம் கடும் முயற்சிக்குப் பின்னர் 2014 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஜி.எஸ்.எல்.வி., D5 ராக்கெட், ஜி.சாட் 14 செயற்கைக்கோளை தாங்கிச் சென்று வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தியது.

2015ஆம் ஆண்டு ஜிஎஸ்எல்வி D6 ராக்கெட், ஜிசாட்-6 என்ற செயற்கைக்கோளையும், 2016- செப்டம்பர் மாதம் ஜிஎஸ்எல்வி F05 - இன்சாட் - 3DR செயற்கைக்கோளையும் விண்ணில் நிலை நிறுத்தின. அதை தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு மே மாதம் ஜிஎஸ்எல்வி F09, ஜி.சாட் 9 என்ற செயற்கைக்கோள் திட்டமும், 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜிஎஸ்எல்வி F08, ஜி.சாட் - 6A என்ற செயற்கைகோள் திட்டமும் வெற்றியடைந்தன.

2018ஆம் ஆண்டு ஜிஎஸ்எல்வி F11 - ஜி.சாட் - 7A செயற்கைகோளை விண்ணில் நிலைநிறுத்தியது. ஆனால் இன்று ஜி.எஸ்.எல்.வி. எப்.10 ராக்கெட், EOS - 03 செயற்கைகோளுடன் விண்ணில் பாய்ந்தது. ஆனால் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தோல்வியடைந்தது.

20 ஆண்டுகளில் ஜிஎஸ்எல்வி ராக்கெட்டின் வெற்றியும் தோல்வியும் :

2001: ஜிஎஸ்எல்வி - D1 ராக்கெட், ஜி.சாட்-1 செயற்கைக்கோளை தாங்கிச் சென்று வெற்றிகரமாக நிலை நிறுத்தியது

2003: ஜிஎஸ்எல்வி - D 2 ராக்கெட், ஜி.சாட்-2 செயற்கைக்கோளை வெற்றிகரமாக நிலை நிறுத்தியது

2004: ஜிஎஸ்எல்வி F-01 ராக்கெட் , ஜி.சாட் 3 செயற்கைக்கோளை தாங்கிச் சென்று நிலைநிறுத்தியது

2006: ஜிஎஸ்எல்வி F-02 ராக்கெட் ஏந்திச் சென்ற இன்சாட் 4சி செயற்கைக்கோள், தொழில்நுட்ப கோளாறு காரணமாக விண்ணில் பாயவில்லை

2007: ஜிஎஸ்எல்வி - F04 ராக்கெட் இன்சாட் - 4சிஆர் செயற்கைக்கோளை வெற்றிகரமாக நிலைநிறுத்தியது

2010: ஜிஎஸ்எல்வி. D 3 ராக்கெட், ஜி.சாட் 4 செயற்கைக்கோளை விண்ணில் நிலைநிறுத்தாமல் தோல்வி

2010: ஜிஎஸ்எல்வி- F06 ராக்கெட் ஜி.சாட் - 5P செயற்கைக்கோகோளை விண்ணில் நிலைநிறுத்தாமல் தோல்வி

2014: ஜிஎஸ்எல்வி D5 ராக்கெட், ஜி.சாட் 14 செயற்கைக்கோளை வெற்றிகரமாக நிலைநிறுத்தியது

2015: ஜிஎஸ்எல்வி D6 ராக்கெட், ஜிசாட்-6 செயற்கைக்கோள் திட்டம் வெற்றி

2016: ஜிஎஸ்எல்வி F05 ராக்கெட் , இன்சாட் - 3DR செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தியது

2017: ஜிஎஸ்எல்வி F09 ராக்கெட், ஜி.சாட் 9 செயற்கைக்கோளை சுமந்து விண்ணில் நிலை நிறுத்தியது.

2018: ஜிஎஸ்எல்வி F08 ராக்கெட் , ஜி.சாட் - 6A செயற்கைக்கோள் திட்டம் வெற்றி

2018: ஜிஎஸ்எல்வி F11 - ஜி.சாட் - 7A செயற்கைக்கோள் திட்டம் வெற்றி

2021: ஜி.எஸ்.எல்.வி. F10 - EOS - 03 செயற்கைகோள் திட்டம் தோல்வி