அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடங்கி 140 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து கூகுள் நிறுவனம் டூடுள் வெளியிட்டு வரவேற்றுள்ளது.
கூகுள் வழக்கம் போல் தனது முகப்பு பக்கத்தில் டூடுள் போட்டு இந்த நாளை வரவேற்றுள்ளது. இந்த டூடுள் கிரிக்கெட் போட்டியில் வீரர்கள் விளையாடுவது போல் அமைக்கப்பட்டுள்ளது. பந்துவீச்சாளர் பந்து வீசுவது போன்றும் அதனை பேட்ஸ்மேன் அடிப்பதும், பீல்டர்கள் அதனை பிடிக்க முயல்வது போன்றும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த டூடுளை க்ளிக் செய்தால் அது கிரிக்கெட் போட்டியின் வரலாற்றை விவரிக்கிறது.
அங்கீகரிக்கப்பட்ட முதல் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் 1877 ஆம் ஆண்டு மார்ச் 15 ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப்போட்டியில் ஆஸ்திரேலியாவும் இங்கிலாந்தும் மோதின. மார்ச் 15 முதல் மார்ச் 19 வரை இந்த டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலிய அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றது.