உயிர்கள் வாழ தகுதிபடைத்த 7 புதிய கிரகங்களை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். கூகுள் நிறுவனம் தனது டூடுள் பக்கத்தில் அதை வெளியிட்டு புதிய கிரகத்தை வரவேற்றுள்ளது.
கிட்டத்தட்ட பூமியின் அளவிலான இந்த கிரகங்கள் பூமியிலிருந்து 40 ஒளியாண்டு தொலைவிலுள்ள நட்சத்திரத்தை சுற்றி வருவதை நாசாவின் ஸ்பைட்செர் தொலைநோக்கி மூலம் கண்டறிந்துள்ளனர். அந்த நட்சத்திரக் குடும்பத்துக்கு ட்ராப்பிஸ்ட் - 1 (TRAPPIST-1) என நாசா பெயரிட்டுள்ளது. இந்த கிரகங்களின் பரப்பில் தண்ணீர் இருப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அதனால் அங்கு உயிரினங்கள் இருக்கவும் வாய்ப்பு இருப்பதாக நாசா விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
சூரிய குடும்பத்தில் புதிதாக இடம் பெற்றுள்ள இந்த புதிய கிரகத்தை வரவேற்கும் வகையிலும், நாசாவின் அறிய கண்டுபிடிப்பை கவுரவிக்கும் வகையிலும் கூகுள் நிறுவனம் டூடுள் பக்கத்தில் அனிமேஷன் எமோஜ்களால் ஆன சிறப்பு படங்களை வைத்து பெருமைப்படுத்தியுள்ளது. டூடுள் அனிமேஷன் ஒரு ஸ்மைலி எமோஜ் டெலஸ்க்கோப் மூலம் சூரிய குடும்பத்தில் உள்ள புதிய கோள்களை பார்ப்பது போலவும் அதில் புதிய கோள் ஒன்று புலப்படுவது போலவும் வடிவமைக்கப்பட்டுள்ளது