திருமணம் PT
சிறப்புக் களம்

கொல்கத்தா: கொரோனோ காலத்தில் திருமணம் செய்த 15 ஜோடிகளுக்கு எழுந்த சிக்கல்; மீண்டும் செய்யவேண்டிய நிலை

கொல்கத்தா மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் கோவிட் லாக்டவுனின் போது திருமணம் செய்து கொண்ட திருமண ஜோடிகளில், 15 ஜோடிகளை மீண்டும் திருமணம் செய்துக்கொள்ள வேண்டுமென்று கொல்கத்தா மாநில அரசு தெரிவித்துள்ளது.

Jayashree A

கொல்கத்தாவில் ஊரடங்கு காலத்தில் திருமணம் செய்துகொண்ட 15 ஜோடிகளின் திருமணச் சான்றிதழில் ஏற்பட்ட பிழைகள் காரணமாக, அவர்களின் திருமணச்சான்றிதல் செல்லாதது என்று தெரிவித்துடன் மீண்டும் அவர்களைத் திருமணம் செய்துகொள்ள மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.

இது கேட்பதற்கு சிரிப்பை வரவழைத்தாலும், திருமணம் செய்துக் கொண்ட ஜோடிகள் மீண்டும் தங்களுடைய வாழ்க்கை துணைகளை திருமணம் செய்துக்கொள்ள வேண்டும் என்றும், அப்பொழுது தான் சரியான திருமண சான்றிதழ் வழங்கமுடியும் என்றும் கொல்கத்தா திருமணப்பதிவாளர் அலுவலகம் கூறியுள்ளது.

நடந்தது என்ன?

கொல்கத்தா மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் கோவிட் லாக்டவுனின் போது திருமணம் செய்து கொண்ட திருமண ஜோடிகளில், 15 ஜோடிகளை மீண்டும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனெனில் அவர்களது திருமணப் பதிவுச் சான்றிதழில் திருத்த முடியாத பிழைகள் இருப்பதால் சட்டச் சிக்கல்களைத் தவிர்க்க அவர்கள் மாவட்ட நீதிமன்றத்திற்குச் சென்று, அவர்களது திருமணத்தை ரத்து செய்து மறுபடியும் அவர்களை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என உத்திரவிட்டுள்ளது. திருமணச் சான்றிதழ் ஒருமுறை வழங்கப்பட்டால் மாவட்ட நீதிமன்றத்தால் செல்லாது என்று அறிவிக்கப்பட்டு ரத்து செய்யப்படலாம் என்பது குறிப்பிடதக்கது.

கொல்கத்தா திருமணப்பதிவாளார் அலுவலகம் கொரோனா பாதிப்பின் போது வழங்கப்பட்ட 8,000க்கும் மேற்பட்ட திருமணச் சான்றிதழ்களில் சிலவற்றில் தவறுகளை கண்டறிந்துள்ளது. அவற்றில் 15 திருமணசான்றிதழில் ஏற்பட்டுள்ள பிழைகளை சரிசெய்ய இயலாததால், அந்த 15 ஜோடிகளுக்கு புதிய திருமணச் சான்றிதழ் வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி இந்த 15 திருமண ஜோடிகளை மீண்டும் திருமணம் செய்துக்கொள்ளுமாறு, மாவட்ட நீதிமன்றம் கேட்டுள்ளது. இதில், 12 பேர் சிறப்பு திருமணச்சட்டம் 1954ன் கீழ் திருமணம் செய்து 30 நாட்களுக்குப் பிறகு சான்றிதழ்களைப் பெற்ற இந்து தம்பதிகள். இவர்களையும் சேர்த்து 15 திருமண சான்றிதழ்கள் சட்டப்படியாக செல்லதக்கதல்ல என்று அறிவித்துள்ளது.

உதாரணமாக, சிலவற்றில் சாட்சிகளின் முகவரிகள் காணவில்லை அல்லது வழங்கப்பட்ட தொலைப்பேசி எண்கள் சரியானதாக இல்லை. மேலும், திருமணப் பதிவாளர்கள் இந்த ஜோடிகளின் தரவை தவறாக பதிவேற்றி தவறிழைத்ததாகத்ததாகவும் தெரிகிறது என்று மூத்த அதிகாரி ஒருவர் கூறினார். இந்த பிழைகளை சரிசெய்ய முடியாது என்பதால் இந்த தம்பதிகள் தங்கள் திருமணத்தை மாவட்ட நீதிமன்றத்தில் ரத்து செய்துவிட்டு மீண்டும் திருமணம் செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.