சிறப்புக் களம்

`ஆர்வக்கோளாறால் எடுக்கப்படும் முடிவல்ல மாற்று பாலின முடிவு!’ விளக்கும் மருத்துவர்! #LGBQT

`ஆர்வக்கோளாறால் எடுக்கப்படும் முடிவல்ல மாற்று பாலின முடிவு!’ விளக்கும் மருத்துவர்! #LGBQT

நிவேதா ஜெகராஜா

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் உலகம் முழுவதும் LGBTQ+ சமூகத்தினருக்கான Pride Month-ஆக அனுசரிக்கப்படுகிறது. இந்த மாதத்தில், இந்த சமூகத்தினருக்கான சட்டங்கள், அவர்களுக்கான சமூக உரிமைகள், அவர்கள் எதிர்கொள்ளும் சமூக அழுத்தங்கள்... இவைபற்றியெல்லாம் பேசப்படும். இப்படியாக முழுக்க முழுக்க இந்த மாதம் முழுக்க இந்த சமூகத்தினருக்கான குரல் மேலோங்கி ஒலிக்கும்.

1969-ல் முதன் முதலாக நியூயார்க்கில் ஜூன் மாதம் இந்த சமூகத்தினர் சிலர் இணைந்து தங்கள் உரிமைக்காக போராடினர். அதன் தொடரச்சியாக இந்த மாதத்தில் உலகின் பிற இடங்களிலும் இம்மாதத்தில் இச்சமூகத்திற்காக பல குரல்கள் ஒலிக்கத் தொடங்கின. அதன் விளைவாக, பின் வந்த வருடங்களில் ஜூன் மாதம் என்பது LGBTQ+ சமூகத்தினருக்கான `Pride Month’- ஆக அனுசரிக்கப்படும் நிலை உருவானது. கிட்டத்தட்ட 50 வருஷத்துக்கு மேல பேசப்பட்டு வரக்கூடிய விஷயம் என்றாலும்கூட, இன்றளவும் LGBTQ+ சமூகத்தினர் பத்தின அடிப்படை புரிதல்கூட, நம்மில் பலரிடமும் இல்லை. இப்பவும் ஓர் பாலினரின் சேர்க்கையை பாவச்செயல் அப்டின்னு நினைக்ககூடிய மனநிலை பலருக்கும் இருக்கு.

உண்மையில் LGBTQ+ சமூகத்தினருக்கு என்ன மாதிரியான மாற்றங்களெல்லாம் இருக்கும்? அவர்களின் மற்றவர்களிடமிருந்து வேறுபடுவது எதில்? அவர்களை நாம் புரிந்துக்கொள்வது ஏன் அவசியம்? பருவ வயதிலுள்ள அல்லது டீனேஜில் உள்ள ஒருவருக்கு பாலினம் சார்ந்த மாற்றம் ஏற்பட்டால் அவர்களை பெற்றோர் எப்படி கையாள வேண்டும்? இவர்களின் நலனில் பெற்றோரின் நிலைபாடு எப்படி இருக்க வேண்டும்.... இதையெல்லாம் பத்தி தெரிஞ்சுக்க முற்பட்டோம். குழந்தைகளுக்கான மனநல மருத்துவர் வெங்கடேஷ்வரன், இதுதொடர்பான விவரங்களை நமக்கு வழங்கினார். அவருடன் நாம் நடத்திய நேர்காணல், இங்கே!