சிறப்புக் களம்

சரித்திர நாயகனின் சாதனை துளிகள்

சரித்திர நாயகனின் சாதனை துளிகள்

webteam

 1. டி20 போட்டிகளில் அதிக ஸ்டெம்பிங் (33) செய்த வீரர்... அடுத்த இடத்தில் பாகிஸ்தான் வீரர் கம்ரான் அக்மல்(32) உள்ளார். 

 2. ஒருநாள் போட்டியில் அதிக ஸ்டெம்பிங்(107) செய்த வீரர். அடுத்த இடத்தில் இலங்கையின் சங்ககரா(99) உள்ளார். 

 3. ஐசிசி நடத்திய அனைத்து ட்ராபிகளையும் வென்ற ஒரே கேப்டன். 2007-ல் டி20 உலகக்கோப்பை, 2011-ல் ஒருநாள் உலகக்கோப்பை, 2013-ல் சாம்பியன்ஸ் கோப்பை.

 4. 500 சர்வதேச போட்டியில் விளையாடிய மூன்றாவது இந்திய வீரர் தோனி. சச்சின்(646), ட்ராவிட் (580) இருவருக்கும் அடுத்தபடியாக (500) போட்டியில் தோனி. 

 5. வெளிநாடுகளில் அதிக போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டவர். மொத்தம், 59 போட்டிகள். முந்தைய பெஸ்ட் 58 வெற்றிகள். இது கங்குலி தலைமையில் கிடைத்தது.

 6. ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு மூன்றுமுறை கோப்பையை வாங்கிக் கொடுத்தவர். 

 7. இந்திய அணி சார்பில் அதிக டி20 போட்டியில் (90) விளையாடிய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் தோனி.  

 8. சர்வதேச கிரிக்கெட்டில் கேப்டனாக அதிக சிக்ஸர்கள் விளாசிய வீரர் பட்டியலில் தோனியே முதல் இடத்தில் இருக்கிறார்.

 9. சர்வதேசப் போட்டியில் ஏழாவது மற்றும் அதன்பின் களமிறங்கி அதிக சதங்கள் அடித்த கேப்டன் என்ற சாதனையும் தோனி வசமே இருக்கிறது. மொத்தம் 9 சதங்கள் அடித்துள்ள தோனி, அதில் 2 சதங்கள் ஏழாவது வீரராக களம் இறங்கி அடித்துள்ளார். 

 10. ஒருநாள் அரங்கில் 7-வது அல்லது அதற்கு பின் களமிறங்கி சதம் அடித்த ஒரே கேப்டன் என்ற பெருமை தோனிக்கே உரியது. கடந்த 2012 டிசம்பர் 30ல் சென்னையில் நடந்த பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் தோனி 113 ரன்கள் விளாசினார்.

 11. சர்வதேச ஒருநாள் போட்டியில், அதிக போட்டியில் கேப்டனாக இருந்தவர்கள் பட்டியலில் தோனி மூன்றாவது இடத்தில் இருக்கிறார். ரிக்கி பாண்டிங்(230), ஸ்டீபன் பிளமிங்(218) ஆகியோருக்கு அடுத்தபடியாக (199) போட்டியில் கேப்டனாக இருந்தவர் என்ற பெருமையை தோனி தன் வசப்படுத்தியுள்ள்ளார்.

 12. விளையாட்டு துறைக்கான மிக உயரிய விருதான ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருதை 2007-08-ல் இவர் பெற்றுள்ளார். பிரிட்டனின் டி மோன்ட்போர்ட் பல்கலைக்கழகத்தின் சார்பாக 2012ல் தோனிக்கு டாக்டர் பட்டம் தரப்பட்டது. 2011-ல், எல்லை பாதுகாப்பு ராணுவ பிரிவின் சார்பில், கவுரவ பதவி வழங்கப்பட்டது.

 13. ஐபிஎல் போட்டியில் அதிக கேட்ச் பிடித்த விக்கெட் கீப்பர் என்ற சாதனையை தோனி படைத்துள்ளார். மொத்தம் 87 கேட்ச்.

14. தனது கடைசி டெஸ்டில் பங்கேற்றபோது தோனி மொத்தமாக 9 விக்கெட் வீழ்ச்சிக்கு (8 கேட்ச் + 1 ஸ்டெம்பிங்) காரணமாக இருந்தார். இதன்மூலம் ஒரே டெஸ்டில் அதிக விக்கெட் வீழ்ச்சிக்கு காரணமாக இருந்த விக்கெட்கீப்பர் கேப்டன் என்ற சாதனை படைத்தார்.

15. பேட்டிங், கீப்பிங் மட்டுமல்லாமல் அவ்வப்போது தோனி பந்து வீசவும் செய்துள்ளார். 9 சர்வதேச போட்டியில் பந்து வீசியுள்ள அவர் 132 பந்துகளை வீசி ஒரு விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளார். ஒரு விக்கெட் கீப்பரால் வீசப்பட்ட அதிகமான பந்துகள் இது தான். 

16. 199 ஒருநாள் போட்டியில் 110 வெற்றிகள், 72 டி20 போட்டியில் 42 வெற்றிக்கு தோனி கேப்டனாக இருந்துள்ளார். அதேபோல் 60 டெஸ்டுகளில் 27 போட்டியிலும் வெற்றிக் கேப்டனாக இருந்துள்ளார்.  

17. டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்று வகையான கிரிக்கெட் போட்டிகளில் 50-க்கும் அதிகமான போட்டியில் கேப்டனாக இருந்த ஒரே வீரர் தோனி.

18. அதிக சர்வதேச போட்டியில் கேப்டனாக இருந்த வீரர் தோனி. டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்று வகைபோட்டியிலும் சேர்த்து 331 போட்டியில் கேப்டனாக இருந்துள்ளார். ரிக்கி பாண்டிங் 324 போட்டியில் கேப்டனாக இருந்து அடுத்த இடத்தில் உள்ளார்.

19. ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஒருநாள் முத்தரப்பு தொடரை இந்தியா வென்றதில்லை என்ற குறையை போக்கியவர். 2008ல் நடந்த காமன்வெல்த் பேங்க் சீரிசில் இந்த சாதனையை நிகழ்த்தினார்.

20. ஒருநாள் போட்டி வரலாற்றில் தோனி அடித்த 183 ரன்கள் தான், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ஒருவரின் தனிப்பட்ட அதிகபட்ச ஸ்கோர்.

21. ஒருநாள் கிரிக்கெட்டுக்காக ஐசிசி தேர்வு செய்யும் உத்தேச அணியில் 8 முறை (7 முறை தொடர்ச்சியாக) இடம் பிடித்த வீரர் தோனி. அதில் 5 முறை இவரை கேப்டனாக அறிவித்தது ஐசிசி.

22. 2008 மற்றும் 2009ம் ஆண்டுகளில், ஐசிசி சார்பில் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரராக தேர்வானவர் தோனி. ஐசிசியின், மக்கள் விருப்ப விருதை 2013ல் தோனி தட்டிச் சென்றார்.