சிறப்புக் களம்

தோனியும் காதலும் ! பின்பு ஸீவாவும்

தோனியும் காதலும் ! பின்பு ஸீவாவும்

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியை பொறுத்தவரை 2007 மிகவும் முக்கியமான ஆண்டுதான். அந்தாண்டுதான் டி20 உலகக் கோப்பையை தோனி தலைமையிலான அணி பெற்றது, அதே ஆண்டில் தோனி காதல் வலையிலும் வீழ்ந்தார். தோனிக்கு கிரிக்கெட் வாழ்கையும், காதல் வாழ்க்கையும் உச்சத்துக்கு போனது 2007 ஆம் ஆண்டில்தான் என்பதை அவரை பல முறை பல்வேறு சந்தர்பங்களில் கூறியுள்ளார். தோனி எப்போது புகழின் உச்சத்துக்கு சென்றாரோ அவர் மீதான காதல் அம்புகளும், கிசுகிசுக்களும் பாய்ந்துக்கொண்டுதான் இருந்தன.

தீபிகா படுகோன் காதல் வளையில் தோனி, லஷ்மி ராய்யுடன் இரவில் சென்னை நகரை வலம் வரும் தோனி என ஏதோ ஒரு நடிகையுடன் அவரை தொடர்புபடுத்தி பத்திரிக்கைகளும் ஊடகங்களும் செய்திகளை வெளியிட்டு வந்தன. ஆனால், எப்போதும் போல தன் மீதான சர்ச்சைகளுக்கு தோனி எப்போதும் பதிலளிப்பதில்லை. அதுவும் காதல் கிசுகிசு என்றால் மூச்சு கூட விடமாட்டார். ஆனால் ஊடகங்கள் யாருடன் தோனி காதிலில் விழுந்தார் என்பதை சரியாக கணிக்க தவறிவிட்டன. அவ்வளவு ரகசியமாக சாக்க்ஷியின் காதலை வைத்திருந்தார் தோனி.

தோனியும் அவரது காதல் மனைவி சாக்க்ஷியும் சிறுவயதில் பள்ளியில் ஒன்றாக ப டித்தவர்கள். அதன் பின்னர் இருவருக்கிடையே தொடர்பில்லாமல் இருந்தது. தோனியும் ரயில் நிலையத்தில் டிடிஆர் வேலை, கிரிக்கெட் போட்டிகள், அணியில் இடம் பிடிக்க திண்டாட்டம் என மிக மிக வேகமாக கிரிக்கெட்டை நோக்கி சென்றுக் கொண்டிருந்தார். இதன் பின்பு, 2007 ஆம் ஆண்டு கொல்கத்தாவின் ஈடன் கார்டனில் நடைபெறும் உள்ள போட்டியில் பங்கேர்பதற்காக அங்குள்ள தாஜ் ஹோட்டலில் இந்திய அணி தங்கியுள்ளது. அப்போது இந்தியா - பாகிஸ்தான் இடையிலான டெஸ்ட் போட்டி அங்கு நடைபெற இருந்தது. இதனால் ஹோட்டலுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போட்டிருந்தது.

சாக்க்ஷி அந்த ஹோட்டலில் கேட்டரிங் படித்துகொண்டே வேலைப்பார்த்து கொண்டிருந்தார். தோனியை எப்படியாவது பார்த்துவிட வேண்டும், தான் யார் என சொல்லவிட வேண்டும் என்று ஆர்வம். அதிலும் சாக்க்ஷிக்கு லக்குதான், தோனியின் மேலாளராக இருந்த யுதாஜித் சாக்க்ஷிக்கு நண்பர். அதனால் யுதாஜித்திடம் தான் தோனியை சந்திக்க விரும்புவதாக தெரிவித்தார். இதனை தோனியிடம் யுதாஜித் தெரிவிக்க இருவரும் ஒருவையொருவர் சந்தித்துக்கொண்டனர்.

இந்தச் சந்திப்பு தோனியின் ஹோட்டல் அறையில்தான் முதலில் நடந்தது. தோனிக்கு சாக்க்ஷியை முதலில் அடையாளம் தெரியவில்லை, பின்பு பள்ளி நாட்களை ஞாபகப்படுத்தியுள்ளார் சாக்க்ஷி. பின்பு இருவருக்குமான நட்பு இயல்பாக தொடங்கி, மெல்லிய காதலாக அரும்ப தொடங்கியது. பின்னர் தோனி தனது மேலாளரான யுதாஜிட்டிடம் இருந்து சாக்க்ஷியின் மொபைல் நம்பரை வாங்கி அவருக்கு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.

ஆனால் இதை சாக்க்ஷியால் நம்ப முடியவில்லை. பின்னர் இருவருக்கும் நெருக்கம் அதிகமாக மார்ச் 2008 ஆம் ஆண்டுக்கு பிறகு யாருக்கும் தெரியாமல் ´டேட்டிங்´ செல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். இந்த டேட்டிங் இருவருக்குள்ளேயும் ஆழமான புரிதலை ஏற்படுத்தியது. பிறகு அந்த ஆண்டு மும்பையில் நடைபெற்ற தன் பிறந்த நாள் விழாவுக்கு தோனி சாக்க்ஷியை முதல்முறையாக அழைத்தார். பின்பு, அவ்விழால் திருமணம் செய்துக்கொள்ள சாக்க்ஷியிடம் ஒப்புதல் கேட்டார்.

பின்பு, இரண்டு வீட்டாருக்கும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டு பெற்றோர்கள் சம்மதத்துடன் காதலியை மனைவியாக 2010 ஆம் ஆண்டு ஜூன் 4 இல் மண முடித்தார் தோனி.  திருமணம் முடிந்த பின்பு மிக மிக மகிழ்சியாக சென்றுக் கொண்டிருந்தது இருவரது வாழ்கையும், சாக்க்ஷி இல்லாமல் எந்தவொரு சுற்றுப் பயணத்துக்கும் தோனி சென்றதில்லை. பின்பு 2015 பெப்ரவரி 6 ஆம் தேதி தோனி - சாக்க்ஷி தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது.

அதற்கு ஸீவா என பெயர் சூட்டினார். முன்பு சாக்க்ஷியுடன் கிரிக்கெட் போட்டிகளுக்கும், சுற்றுப் பயணங்களுக்கும் செல்லும் தோனி இப்போது மகள் ஸீவாவையும் அழைத்துச் செல்கிறார் தோனி. இப்போது இன்ஸ்டாகிராமிலும், ட்விட்டரில் தோனியும் மகளும் செய்யும் சேட்டைகள்தான் வைரல்.

மகளுக்கு தலை சீவி விடுவது, நீச்சல் விளையாடுவது, வாக்கிங் கூப்பிட்டுபோவது என தல தோனி, தந்தையாக இருக்கும் நேரங்களை அவரின் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.