சிறப்புக் களம்

செல்லப் பிராணிகளுடன் இந்தியாவை சுற்றும் டெல்லி பெண்

செல்லப் பிராணிகளுடன் இந்தியாவை சுற்றும் டெல்லி பெண்

webteam

செல்லப்பிராணிகளுடன் இந்தியாவை சுற்றி வருவதை அதிமாக விரும்புகிறார் இந்த டெல்லி பெண். இது புதியக் கலாச்சாரமான இந்தியாவில் உருவெடுத்து வளர்ந்து வருகிறது. நடிகை த்ரிஷா கூட தன் பயணங்களின் போது கூடவே தனது குட்டி நாயை கூட்டிக் கொண்டுப் போகிறார். இந்தியா போன்ற நாட்டில் பெண்கள் பயணம் செய்வதில் அதிக சிக்கல்கள் இருக்கின்றன. அவர்களின் பாதுக்காப்பு எப்போதும் கேள்விக் குறியாகவே உள்ளது.

ஆகவே பெண்களை சுதந்திரமாக வெளியே அனுப்புவதை அவரது உறவினர்கள் மிகுந்த தயக்கத்துடனேயே அனுமதிக்கின்றன. பெண்கள் சுதந்திரமாக பயணம் மேற்கொள்ள வேண்டும், கூடவே அவர்களுக்கு ஒரு பாதுக்காப்பு துணையும் வேண்டும் அதற்கு என்ன தீர்வு? அவர்கள் கூடவே எப்போதும் ஒரு செல்லப்பிராணியை அழைத்து கொண்டுப்போவதுதான். அதனைதான் இப்போது இந்த டெல்லி பெண் செய்ய தொடங்கிருக்கிறார்.

அவர்தான் திவ்யா. இவர் இரண்டு நாய்களை வைத்திருக்கிறார். அவருக்கு பயணம் என்றால் மிகப்பெரிய காதல். ஆகவே அவர் பயணத்தின் போது எல்லாம் உடன் தனது செல்லக்குட்டியை அழைத்துச் செல்ல ஆரம்பித்திருக்கிறார். அப்படி அவர் பயணம் செய்யும் அனுபவங்களை புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டு வருகிறார். அவர் தனது ட்ராவல் குறித்து என்டிடிவி உடன் சில விஷயங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார். எப்போதும் ‘நெருங்கிய நண்பருடன்’பயணிப்பதில் பல நேர்மறையான நம்பிக்கை கிடைக்கிறது.

மேலும் முற்றிலும் ஒரு வித்தியாசமான பார்வை கிடைப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார். கூடவே இந்தியாவை பற்றிய புதிய கண்டுப்பிடிப்புகளை செய்ய செல்லப்பிராணிகளுடன் பயணிப்பது உதவி புரிவதாகவும் அவர் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். இவர் தனது சாகசப் பயணங்கள் பற்றிய படங்களை மற்றும் வீடியோக்கலை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொள்வதை பலரும் ஆர்வத்துடன் பின்தொடர்ந்து கண்டுகளித்து வருகின்றன.

“என்னிடம் மூன்று நாய்கள் இருந்தன. ஆனால் இப்போது இரண்டுதான் உள்ளது” என்கிறார் திவ்யா. இவர் ஒரு சுயாதீனமான பத்திரிகையாளர். டெல்லியை மையமாக வைத்து இயங்கி வருபவர். மேலும் சவுத் டெல்லி பகுதியான நிஜாமுதீன் வெஸ்ட் வசித்தபோதும் கூட இந்தச் செல்லப்பிராணிகளை அவர் காப்பாற்றி வந்ததாக அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

“டைகர்ஸ் மற்றும் பாண்டி இவை இரண்டும் என் ஆஃபீஸ் நாய்கள். என் அலுவலகம் மூடிய பிறகும் அவை எனக்காக காத்திருக்கும். நான் போனதும் கதவின் பின் பக்கம் இருந்து ஓடிக்கொண்டு வரும். அவை நான்கு மாதத்திற்கு முன்பு எட்டுக் குட்டிக்கள் போட்டது. அதனை நான் போய் பார்க்க முடியவில்லை. ஆகவே நான் என் குடும்பத்தோடு கொண்டு வந்து வைத்துக்கொள்ள முடிவெடுத்தேன் என்கிறார். ஆனால் பாண்டி கடந்த ஆண்டு இறந்து போய்விட்டது. ஆகவே அதன் பிறகு டைகர்ஸ் மற்றும் மார்கோபோலோ உடன் தனது ட்ராவலை தொடங்கியுள்ளார்.

இவற்றுடன் பல மணிநேரங்களை சாலையிலேயே செலவழிப்பதும் மேலும் சாலையோரமாக உள்ள ஆதரவற்ற செல்லப் பிரணிகளை இருந்துள்ளார்.பொதுவாக செல்லப்பிராணிகளுடன் பயணிப்பது சிரமமானக் காரியம். கூடவே உலகளவில் ஒப்பிடும் போது இந்தியர்கள் செல்லப்பிராணிகளுடன் பயணிப்பவர்கள் அல்ல. அதுவும் இரண்டு நாய்களுடன் பயணிப்பது சவாலான காரியம். யாவருக்கும் நேர்மறையான அனுபவங்கள் போகப்போகதான் வரும் என சொல்லும் திவ்யா, “நாங்கள் சிறு தயக்கத்தோடு கவலையோடும் தொடக்கத்தில் ரயிலில் நாய்களுடன் பயணித்தோம். அந்த முதல் பயணம் டெல்லியிலிருந்து கோவாவின் மத்கான் ஜங்கஷன் வரை பயணித்தோம். அந்த 32 மணிநேர பயணம் எங்களுடைய பார்வையையே மாற்றியது”  என்கிறார் இன்னொரு இந்தப் பயணி.

மேலும் மார்கோபோலோவுக்கும் டைகர்ஸூக்கும் ரயில் பயணிப்பது என்றால் கொள்ளை ப்ரியமாம். அவை ஜன்னல் ஓரமாக உட்கார்ந்து கொண்டே சந்தோஷமாக பயணிக்கும் என்கிறார் இவர். கோவா, இந்தியாவிலேயே அதிகமாக செல்லபிராணிகளை விரும்பும் மாநிலம். பட்ஜெட்டிற்கு தக்க படி நமக்கான தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளலாம் என்கிறார்.