சிறப்புக் களம்

பசு குண்டர்களுக்கு எதிரான இந்தியாவின் முதல் தீர்ப்பு

பசு குண்டர்களுக்கு எதிரான இந்தியாவின் முதல் தீர்ப்பு

webteam

ஜார்க்கண்டில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் அலிமுதீன் அன்சாரி என்ற இறைச்சி ஏற்றுமதியாளர் கொல்லப்பட்டார். கொல்லப்பட்டதற்கான கரணத்தை விசாரித்த காவல்துறை பசு பாதுகாவலர்கள் என்ற போர்வையில் இருந்த குண்டர்கள் 11 பேரை கைது செய்தது. அவர்களிடம் நடத்திய விசாரணையில் அன்சாரி பசு இறைச்சியை ஏற்றுமதி செய்ததால் அவரை கொன்றோம் என வாக்குமூலம் அளித்தனர்.

ஆனால் அன்சாரி கொண்டு சென்றது பசு இறைச்சி அல்ல என விசாரணையில் தெரிய வந்தது. இந்த அவ்ழக்கு ராம்கர் மாவட்ட நீதிமன்றத்தில் உள்ள விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. பாஜகவின் உள்ளூர் ஊடக மேலாளர் உள்ளிட்ட 11 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கு விசாரணை தொடங்கிய நாள் முதல் குறிப்பிட்ட இடைவெளிகளில் நீதிபதி ஓம்பிரகாஷ் தொடர்ந்து விசாரணையை மேற்கொண்டு வந்தார். காவல்துறையும் எந்த விதாமான ஒத்திவைப்பும் கேட்காமல் உரிய ஒத்துழைப்பை கொடுத்தது. அரசு தரப்பில் இருந்து 15 சாட்சிகள் கொண்டு வரப்பட்டனர். இரு தரப்பிலும் அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மொத்தம் 90 அமர்வுகளில் 9 மாதத்திற்குள்ளாக வழக்கை முடித்து கடந்த 16-ம் தேதி வழக்கில் தீர்ப்பு வெளியானது.

இந்தியாவில் பசு குண்டர்களுக்கு எதிரான வழக்கில் வழங்கப்பட்ட முதல் தீர்ப்பு இது. 10 பேர் ஆயுள் தண்டனை பெற்றுள்ளனர். மற்றொரு குற்றவாளி 18 வயதுக்கு உட்பட்டவராக இருப்பதால் தண்டனை முடிவு செய்யப்படாமல் உள்ளது. இதனை விரைந்து முடிக்க காரணமாக இருந்த அனைவருக்கும் அன்சாரியின் குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்

இது குறித்து பேசிய ஜார்க்கண்ட் உயர்நீதிமன்ற பதிவாளர், அம்ப்ஜ் நாத், வழக்கின் ஆரம்பத்தில் இருந்தே நீதிபதி ஓம்பிரகஷ் மிகுந்த சிரத்தை எடுத்துக் கொண்டார், எந்த காரணம் கொண்டும் நீதி வழங்குவதில் தாமதம் கூடாது என்பதால் இரு தரப்பு வழக்கறிஞர்களுக்கும் தொடர்ந்து என்ன செய்ய வேண்டுமென அறிவுறுத்திக் கொண்டே இருந்தார் என்றார்.

காவல்துறை கண்காணிப்பாளர் கிஷோர் கவுல் மற்றும் அரசு தரப்பு வழக்கறிஞர் சுக்லா ஆகிய இருவரும் தங்கள் தரப்பில் இருந்து மிகப்பெரிய பணியை சிரத்தையோடு செய்து முடித்தனர் என்கின்றனர் வழக்கறிஞர்கள். இது குறித்து பேசிய கண்காணிப்பாளார் கிஷோர் கவுல், இது ஒரு திட்டமிட்ட கொலை என்பதை முன்னரே புரிந்து கொண்டதாகவும், ஜூன் 29-ல் சம்பவம் நடந்தவுடன் வழக்குப்பதிவு, உடனடி விசாரணை, செப்டம்பர் 17-ல் குற்றப்பத்திரிகை, செப்டம்பர் 22-முதல் தொடர் விசாரணை, 15 அரசு தரப்பு சாட்சிகள் என பரபரப்பாகவே வழக்கு சென்றது சென்றார்.

ஜார்க்கண்ட் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பின் மூலம் பசு குண்டர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக புரிந்து கொள்ள முடிகிறது. இது போன்ற வழக்குகளில் தாமதம் இல்லாமல் செயல்பட்ட காவல்துறை அதிகாரிகளும், நீதிபதியும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.