சிறப்புக் களம்

எந்த மருத்துவமனையில் எவ்வளவு படுக்கை வசதிகள்?- முழு விவரத்தை சொல்லும் தமிழக அரசின் வலைதளம்

எந்த மருத்துவமனையில் எவ்வளவு படுக்கை வசதிகள்?- முழு விவரத்தை சொல்லும் தமிழக அரசின் வலைதளம்

EllusamyKarthik

கொரோனா இரண்டாம் அலை தீவிரம் அடைந்துள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் குறித்த விவரத்தை மக்கள் அறிந்து கொள்வதற்கு ஏதுவாக அரசின் வலைதளத்தில் அவ்வப்போது அப்டேட் செய்யப்பட்டு வருகிறது.

நாட்டில் கொரோனாவின் பரவல் அதிகரித்த வண்ணம் உள்ளது. நாள் ஒன்றுக்கு மூன்று லட்சத்திற்கும் மேலானவர்கள் கொரோனா தொற்றால் பாதித்து வருகின்றனர். கடந்த ஏப்ரல் 9 முதல் 22 வரையில் சுமார் 122325 பேர் நோய் தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டில் பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க படுக்கை வசதி கூட இல்லாத நிலை மருத்துவமனைகளில் நிலவுகின்றன.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் குறித்த விவரத்தை மக்கள் அறிந்து கொள்வதற்கு ஏதுவாக தமிழக அரசின் வலைதளம் ஒன்றில் அவ்வப்போது அப்டேட் செய்யப்படுகிறது. இந்த வலைதளம், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் கீழ் இயங்குகிறது.

இந்த வலைதளத்தை பயன்படுத்தி எந்த மருத்துவமனையில் படுக்கை வசதி உள்ளது என்பதை மக்கள் அறிந்து கொண்டு, அதற்கு தகுந்தபடி மருத்துவமனைகளை அணுகலாம். 

குறிப்பாக, கொரோனா நோயாளிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள படுக்கை வசதிகள், ஆக்ஸிஜன் சப்போர்ட் உள்ள படுக்கைகள், ஆக்ஸிஜன் அல்லாத படுக்கைகள், ஐசியு மாறும் வென்டிலேட்டர் சப்போர்ட் உள்ள படுக்கைகள் என அனைத்து தகவலும் உள்ளது. அதில் எத்தனை படுக்கைகள் காலியாக உள்ளது. நோயாளிகள் உள்ள படுக்கைகள் குறித்த விவரங்களும் உள்ளன. அதோடு சம்பந்தப்பட்ட மருத்துவமனையின் தொடர்பு எண்களும் உள்ளன. விவரங்களுக்கு : https://stopcorona.tn.gov.in/beds.php