சிறப்புக் களம்

ரூ.17 கோடி செலவில் செயற்கை மழை..!

webteam

சீனாவில் நிலவும் வறட்சியை தடுக்க செயற்கை மழைப் பொழிவு நிகழ்த்த அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.

சீனாவின் வடமேற்கு மாகாண பகுதிகள் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் அப்பகுதியில் உள்ள ஆறுகள், குளங்கள் எல்லாம் வறண்டு காணப்படுகிறது. அங்கு குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், வறட்சிக்கு தீர்வு காணும் வகையில், செயற்கையை மழையை பொழிய செய்ய அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. சுமார் 9,60,000 சதுர மைல் பரப்பளவில் இத்திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளது.

இதற்கான சோதனையை அந்நாட்டு அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த திட்டம் முழுவதும் நிறைவடைய மூன்று ஆண்டுகள் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாபெரும் திட்டத்திற்கு இந்திய ரூபாயில் 16 கோடியே 80 லட்சம் செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.