சிறப்புக் களம்

கொரோனாவால் உறவுகள், நண்பர்களோடு பக்ரீத் கொண்டாட முடியவில்லை: வீட்டிலேயே கொண்டாடிய மக்கள்

கொரோனாவால் உறவுகள், நண்பர்களோடு பக்ரீத் கொண்டாட முடியவில்லை: வீட்டிலேயே கொண்டாடிய மக்கள்

Veeramani

கொரோனா காரணமாக  உறவினர்கள் , நண்பர்களை  தவிர்த்து குடும்பத்தினருடன் மட்டும் எளிமையாக கொண்டாடும் பண்டிகையாக மாறி உள்ளது இந்த ஆண்டின் பக்ரீத் பண்டிகை.

இஸ்லாமியர்கள் காலங்காலமாக நம்பிக்கையின் அடிப்படையில் கொண்டாடி வரும் பண்டிகைகளில் பக்ரீத் பண்டிகையும் முக்கியமானது. இந்த நாளில் புத்தாடை உடுத்தி குருபானி  என்று சொல்லப்படும்  உணவுக்கான கறியை, இல்லாதவர்கள் அனைவருக்கும் கொடுத்து  எல்லோர் வீட்டிலும்  சரி சமமாக  கொண்டாடப்படும்  பண்டிகையாக பக்ரீத் இருக்கும்.

நெல்லை மாவட்டத்திலும் இன்று பக்ரீத் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக உறவினர்கள் நண்பர்கள் அனைவருடன் இணைந்து கொண்டாடப்படும் இந்த பக்ரீத், இந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக எளிமையாக வீட்டில் மட்டுமே கொண்டாடப்படுகிறது.  குடும்ப உறுப்பினர்களுடன் வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை புத்தாடை உடுத்தி  கறி கொண்டு  பிரியாணி சமைத்து,  பண்டிகை மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

நெல்லை மாநகர் பகுதியில் உஸ்மான்கான் என்பவரது வீட்டில் பிரியாணி செய்து கொண்டாடி மகிழ்ந்த குடும்பத்தினர், அருகில் உள்ள உறவினர்களுக்கும் கொடுத்தும் மகிழ்ந்தனர். பிரியாணி சிறப்பு என்றாலும் பக்ரீத் அன்று செய்யப்படும் பிரியாணி மிகச் சிறப்பாக இருக்கும் என்று குடும்பத்தினர் தெரிவிக்கிறார்கள்.  இந்த பக்ரீத் பண்டிகை எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் கொண்டாடி வருவதாகவும் அவர்கள்  தெரிவித்துள்ளார்கள்.